அதிபர் தேர்தல்.. இலங்கை எதிர்க்கட்சி தலைவர் இந்தியாவுக்கு விசிட்.. ஜெய்சங்கருடன் சந்திப்பு
டெல்லி: இலங்கை நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவருக்கு இந்தியா திடீர் அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி 5 நாட்கள் பயணமாக இந்தியா வந்த இலங்கை எதிர்க்கட்சி தலைவர் இன்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இலங்கையில் இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இலங்கை அதிபரின் இந்திய பயணம் அந்நாட்டு அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவரான அனுரா குமாரா திஷநாயக்கே இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இலங்கையின் இடதுசாரி ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) கட்சியின் தலைவரான திஷநாயக்கே இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

இந்தியாவின் அழைப்பை ஏற்று 5 நாட்கள் பயணமாக டெல்லி வந்த திஷநாயக்கே இன்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டு இருக்காலம் எனத் தெரிகிறது. திஷநாயக்ககேவுடன் தேசிய மக்கள் சக்தி(என்.பி.பி) கூட்டணியை சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்களும் இந்தியாவுக்கு வந்தனர்.
இலங்கையில், இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது இலங்கையில் திஷநாயக்கேவின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், அவரது இந்தியா பயணம் முக்கியத்தும் பெற்றுள்ளது. ஜேவிபி தலைவரை இந்தியா முறைப்படி அழைப்பு விடுத்து இருப்பது இதுவே முதல் தடவையாகும். ஜெய்சங்கருடனான சந்திப்புக்கு பிறகு திஷநாயக்கே தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
இருநாட்டு உறவுகள் மற்றும் பரஸ்பர பலன்களை மேலும் வலுவாக்குது தொடர்பாக ஆலோசித்தோம். இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தியா எங்களின் அண்டை நாடு என்ற முறையிலும் சாகர் கொள்கை அடிப்படையிலும் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக எப்போதும் உள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இலங்கையில் நடப்பு ஆண்டில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இலங்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அங்கு ராஜபக்சே சகோதர்களின் செல்வாக்கு சரிந்துள்ளது. அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கேவிற்கும் எதிர்ப்புகள் நிலவி வருகின்றன. இதனால், தற்போது இலங்கையில் மக்கள் மத்தியில் எதிர்க்கட்சி தலைவர் திஷநாயக்கேவுக்கு செல்வாக்கு பெருகி வருவதை உள்ளூர் சர்வேக்கள் காட்டுகின்றன.
அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகி வருவதால், தேர்தலில் ஜேவிபி கட்சி வெற்றிக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், திஷநாயக்கவேவுக்கு இந்தியா அழைப்பு விடுத்து இருப்பது இலங்கை அரசியலிலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications