இலங்கை தேர்தல்:யாழ்.,வட்டுக்கோட்டை முதல் திருகோணமலை வரை சிங்கள கட்சியிடம் பறிகொடுத்த தமிழர் கட்சிகள்
டெல்லி: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத் தமிழர்களின் தாயக நிலப் பகுதிகளான வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவின் சிங்கள பேரினவாத கட்சியான ஜேவிபியை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தியே அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த தேர்தலில் ஈழத் தமிழர் அரசியல் கட்சிகள் பிரிந்து நின்றதால் பெரும் தோல்வியை சந்தித்துள்ளன.
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று இரவு முதல் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த முடிவுகளில் தொடக்கம் முதலே ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தியே முன்னிலை பெற்று வருகிறது.

ஈழத் தமிழரின் தாயக நிலப் பகுதிகளான வடக்கு கிழக்கு மாகாணங்களின் யாழ்ப்பாணம், திருகோணமலை மாவட்டங்களில் பெரும்பாலான தேர்தல் தொகுதிகளையும் தேசிய மக்கள் சக்தியே கைப்பற்றி இருப்பது ஈழத் தமிழரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தனித் தமிழீழமே தீர்வு என தந்தை செல்வா தீர்மானம் நிறைவேற்றிய யாழ்ப்பாணம் மாவட்டம் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியிலும் ஈழத் தமிழர் கட்சிகள், சிங்கள ஜேவிபியின் தேசிய மக்கள் சக்தியிடம் தோல்வியைத் தழுவி இருக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்ட தபால் வாக்குகளில் இலங்கை தமிழரசு கட்சி 5,236 வாக்குகளையும் தேசிய மக்கள் சக்தி 3,412 வாக்குகளையும் கருணாவின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 1,383 வாக்குகளையும் பெற்றன
ஈழத் தமிழர்களின் தலைநகராக போற்றப்படும் திருகோணமலையின் சேருவில, மூதூர், திருகோணமலை ஆகிய தேர்தல் தொகுதிகளிலும் ஜேவிபியின் தேசிய மக்கள் சக்தியே அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த 3 தொகுதிகளிலுமே இலங்கை தமிழரசு கட்சி தோல்வியைத் தழுவி இருக்கிறது
யாழ்ப்பாணம் நல்லூரிலும் சிங்களர் கட்சியான தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி 8,831, தமிழ் மக்கள் கூட்டணி 3,527, இலங்கை தமிழரசுக் கட்சி 3,228, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2,396, சுயேட்சைக் குழு(17) 2,279 வாக்குகள் பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் ஊர்க்காவற்றுறை தேர்தல் தொகுதியில் டக்ளஸ் தேவானந்தா கட்சி வெற்றி பெற்றுள்ளது. டக்ளஸின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் 3296, இலங்கை தமிழரசுக் கட்சி 2626, தேசிய மக்கள் சக்தி 2116, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1000 வாக்குகள் பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை முடிவுகள்: தேசிய மக்கள் சக்தி 4,467 இலங்கை தமிழரசு கட்சி 4,022 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2,625 ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 1,980 சுயேட்சைக் குழு 17 - 1,572
யாழ்ப்பாணம் மாவட்டம் மானிப்பாய் தேர்தல் தொகுதியில் ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி அணி வெற்றி தேசிய மக்கள் சக்தி- 10,059 இலங்கை தமிழரசு கட்சி- 4,386 ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 3,443 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 2,751 சுயேட்சைக் குழு 17 - 2,413
யாழ்ப்பாணம் மாவட்டம் கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை தமிழரசு கட்சி- 23,293 தேசிய மக்கள் சக்தி - 8,717 ஐக்கிய மக்கள் சக்தி- 8,554 சுயேட்சைக் குழு 17 - 2,098 டக்ளஸின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி- 1,497 வாக்குகள் பெற்றுள்ளன. யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியிலும் தேசிய மக்கள் சக்திதான் வெற்றுள்ளது.
வன்னி மாவட்டம் முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை தமிழரசு கட்சி 14,297 வாக்குகளையும் தேசிய மக்கள் சக்தி 7,789 வாக்குகளையும் பெற்றுள்ளன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications