டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனாவின் செல்ல பிள்ளை கோத்தபய ராஜபக்சே.. நேற்று இரவே கால் செய்த மோடி.. என்ன பேசினார்கள்?

இலங்கையின் புதிய அதிபராக பதவி ஏற்க இருக்கும் கோத்தபய ராஜபக்சேவிடம் பிரதமர் மோடி நேற்று இரவு போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Gotabaya Rajapaksa wins Sri Lankan presidential election

    டெல்லி: இலங்கையின் புதிய அதிபராக பதவி ஏற்க இருக்கும் கோத்தபய ராஜபக்சேவிடம் பிரதமர் மோடி நேற்று இரவு போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். சுமார் 15 நிமிடங்கள் இவர்கள் போனில் பேசியதாக கூறப்படுகிறது.

    இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே இன்று பதவி ஏற்கிறார். இலங்கை அதிபர் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வி அடைந்துள்ளார்.

    52.25 சதவீத வாக்குகளை பெற்று கோத்தபய வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாசாவுக்கு 41.99 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபக்சே 6924255 வாக்குகள் பெற்றார்.

    பெரிதாகும் காப்பி பேஸ்ட் சர்ச்சை.. ப. சிதம்பரம் ஜாமீன் மனு மீது இன்று சுப்ரீம் கோர்ட் விசாரணை!பெரிதாகும் காப்பி பேஸ்ட் சர்ச்சை.. ப. சிதம்பரம் ஜாமீன் மனு மீது இன்று சுப்ரீம் கோர்ட் விசாரணை!

    சீனா நெருக்கம்

    சீனா நெருக்கம்

    கோத்தபய ராஜபக்சே சீனாவிற்கு மிகவும் நெருக்கமானவர். இலங்கையில் சீனா கால் பதிக்க காரணமாக இருந்தவரே கோத்தபய ராஜபக்சேதான் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் நடந்த உள்நாட்டு போரில் கோத்தபய ராஜபக்சே சீனாவின் உதவியை பெற்றார் என்ற புகாரும் இருக்கிறது.

    இலங்கை எப்படி

    இலங்கை எப்படி

    அதேபோல் சீன இலங்கைக்கு அருகே இந்திய பெருங்கடலில் கடற்படை தளவாடம் அமைக்க முயன்று வருகிறது. அங்கு போர் கப்பல்களை குவிக்க சீனா திட்டமிட்டு வருகிறது. இதற்கு கோத்தபய ராஜபக்சே கண்டிப்பாக அனுமதி அளிப்பார். எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார் என்று கூறுகிறார்கள்.

    புதிய அதிபர்

    புதிய அதிபர்

    இந்த நிலையில்தான் இலங்கையின் புதிய அதிபராக பதவி ஏற்க இருக்கும் கோத்தபய ராஜபக்சேவிடம் பிரதமர் மோடி நேற்று இரவு போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். சுமார் 15 நிமிடங்கள் இவர்கள் போனில் பேசியதாக கூறப்படுகிறது. இலங்கை இந்தியா உறவு குறித்து இவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.

    மோடி வாழ்த்து

    மோடி வாழ்த்து

    முதலில் கோத்தபய ராஜபக்சேவிற்கு வாழ்த்து தெரிவித்த மோடி, பின் அந்நாட்டு அரசியல் குறித்து பேசி இருக்கிறார். இலங்கையில் நிலவும் பொருளாதார மந்தநிலை குறித்தும் இவர்கள் ஆலோசித்து இருக்கிறார்கள். கோத்தபய ராஜபக்சே சீனாவின் நண்பர் என்றாலும் அவர் இந்தியாவில் படித்தவர்.

    வலதுசாரி கொள்கை

    வலதுசாரி கொள்கை

    அதேபோல் இவரும் பிரதமர் மோடி போல வலதுசாரி கொள்கை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் மெஜாரிட்டி மக்களின் தத்துவத்தை ஆதரிப்பவர் கோத்தபய ராஜபக்சே என்பது குறிப்பிடத்தக்கது. புத்த மதம் மற்றும் சிங்கள மொழியை மிக தீவிரமாக பின்பற்றும் நபர்.

    சந்திக்க வாய்ப்பு

    சந்திக்க வாய்ப்பு

    இதனால் பிரதமர் மோடி விரைவில் கோத்தபய ராஜபக்சேவை சந்திக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். கோத்தபய ராஜபக்சே இந்தியா மற்றும் சீனா உடன் எப்படி உறவை மேற்கொள்வார். யாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    English summary
    Srilanka Presidential Elections: PM Modi calls China favorite man Gotabaya Rajapakse yesterday after his victory.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X