Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'கவலைப்படாதீங்க.. நாடே உங்களுடன் உள்ளது..' ஷாருக் கானுக்கு ராகுல் எழுதிய கடிதம்.. வெளியான பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: போதைப்பொருள் வழக்கில் ஆர்யன் கான் சிறையில் இருந்த போது ஷாருக் கானுக்கு ராகுல் காந்தி எழுதிய கடிதம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் எந்தச் சிறுவனும் இப்படி நடத்தப்படக் கூடாது என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, தேசமே உங்களுடன் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அக். 2ஆம் தேதி மும்பையில் இருந்து சொகுசு கப்பல் ஒன்று 3 நாள் பயணமாகக் கோவாவுக்குத் தனது பயணத்தைத் தொடங்கியது. இந்தக் கப்பலில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி ரேவ் பார்ட்டி நடைபெறுவதாக என்சிபி அதிகாரிகள் தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் மாறுவேடத்தில் கப்பலில் ஏறிய என்சிபி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அங்குப் போதைப்பொருட்களைப் பயன்படுத்தி பார்டி நடைபெறுவதைக் கண்டறிந்தனர்.

 ஆர்யன் கான் கைது

ஆர்யன் கான் கைது

போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இந்த வழக்கில் இதுவரை 20 பேரை கைது செய்துள்ளனர். அதில் குறிப்பாகப் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் 23 வயது மகன் ஆர்யன் கானை கப்பலில் வைத்து கைது செய்தது என்சிபி. முதலில் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட அவர் பின்னர் கைது செய்யப்பட்டார். முதலில் ஜாமீன் கோரி அவர் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 வாட்ஸ்அப் சாட்கள்

வாட்ஸ்அப் சாட்கள்

அவர் ஜாமீன் கோரி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்குப் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆர்யன் கான் எதோ ஒரு முறை மட்டும் போதைப்பொருள் பயன்படுத்தியவர் இல்லை என்றும் பல ஆண்டுகளாகவே அவர் போதைப்பொருளைப் பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்தனர். மேலும், அவரது வாட்ஸ்அப் சாட்கள் சந்தேகத்திற்கு இடமாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

 ஜாமீன் மறுப்பு

ஜாமீன் மறுப்பு

ஆர்யன் கானின் வாட்ஸ்அப் சாட்கள் அவர் போதைப் பொருளைப் பயன்படுத்தியது உறுதி செய்யும் வகையில் உள்ளதால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும், சமூகத்தில் பவுர்புல்லான நபர் என்பதால் ஆதாரங்களை அழிக்க முயலலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து ஆர்யன் கான் தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி வழக்கு தொடரப்பட்டது. அதில் தனது மொபைல் போனில் இருந்து வாட்ஸ்அப் சாட்களை என்சிபி அதிகாரிகள் தவறான முறையில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் பல மாதங்களுக்கு முன் நடந்த ஒரு வாட்ஸ்அப் சாட்டை இந்தச் சம்பவத்துடன் தொடர்புப்படுத்துவது சரியானது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

 மும்பை ஐகோர்ட்

மும்பை ஐகோர்ட்

ஆர்யன் கானிடம் இருந்து எந்தவொரு போதைப்பொருளும் கைப்பற்றப்படவில்லை என்பதே அவரது தரப்பில் கூறப்பட்டு வந்த முக்கிய வாதமாக இருந்தது. மும்பை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் ஆர்யன் கான் சார்பில் முன்னாள் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி ஆஜராகி வலுவான வாதங்களை முன் வைத்தார். இதையடுத்து ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. சுமார் 25 நாட்களுக்குப் பிறகு ஆர்யன் கான் சிறையில் இருந்து வீடு திரும்பினார்.

 ராகுல் காந்தி கடிதம்

ராகுல் காந்தி கடிதம்

ஆர்யன் கான் சிறையில் இருந்த போது பல்வேறு பிரபலங்களும் அவருக்கு ஆதரவாகக் கருத்துகளைத் தெரிவித்தனர். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கூட ஷாருக் கானுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், ஆர்யன் கான் சிறையில் இருந்த போது காங்கிரஸின் ராகுல் காந்தி, ஷாருக் கானுக்கு எழுதிய கடிதம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த அக். 14ஆம் தேதி ஆர்யன் கான் இந்த கடித்ததை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தற்போது நீங்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு வருந்துவதாகத் தெரிவித்துள்ளார்.

 தேசமே உங்களுடன்

தேசமே உங்களுடன்

எந்தச் சிறுவனும் இப்படி நடத்தப்படக் கூடாது என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, தேசமே உங்களுடன் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த கடிதத்தில் "மக்களுக்காக நீங்கள் செய்த பல நல்ல பணிகளை நான் பார்த்தேன். அவர்களின் ஆசீர்வாதமும், வாழ்த்துகளும் என்றும் உங்களுக்கு இருக்கும்" என்றும் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+