ஒரே வாரத்தில் அர்னாபுக்கு ஜாமீன்.. 7 மாதங்களாக போராடியும் நீதி மறுக்கப்பட்ட ஸ்டான் ஸ்வாமி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் கடந்த 7 மாதங்களாக ஜாமீன் கிடைக்காமல் போராடி வந்த சமூக போராளி ஸ்டான் சுவாமி கடைசியில் வெளியில் வராமலேயே உயிர் நீத்த சம்பவம் பெரும் கோப அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியைச் சேர்ந்தவர் ஸ்டான் சுவாமி, ஜார்க்கண்ட் பழங்குடியினர் நலனுக்காக குரல் கொடுத்தார். அங்கேயே குடியேறி அவர்களுக்காக குரல் கொடுத்து வந்தார். பல மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் இவர்.

ராஞ்சியில் ஆதிவாசி மற்றும் தலித் மக்களுக்கு சேவை செய்த போது கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். அதாவது மாவோயிஸ்டுகளுடன் இவருக்கு தொடர்பு எனக் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகவும் இவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

ஜாமீன்

ஜாமீன்

இவர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு பலமுறை ஜாமீன் கோரியும் அது கொடுக்கப்படவில்லை. தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது. பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்டான் சுவாமியின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நிலைமை மோசமாகவே அவருக்கு செயற்கை சுவாசத்தின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை பலனில்லை

சிகிச்சை பலனில்லை

எனினும் அவரது உயிர் சிகிச்சை பலனின்றி பிரிந்தது. இதுகுறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் டிசோசா கூறுகையில் ஸ்டான் சுவாமி இறந்துவிட்டார் என்ற செய்தியை கனத்த இதயத்துடன் அறிவிக்கிறோம். அவரை காப்பாற்ற நிறைய முயற்சிகள் மேற்கொண்ட போதும் பலனளிக்கவில்லை என்றார்.

ஜாமீனுக்கு போராட்டம்

ஜாமீனுக்கு போராட்டம்

கடந்த 7 மாதங்களாகவே தொடர்ந்து ஜாமீனுக்காக போராடி வந்தார் ஸ்டான் சுவாமி. கடந்த மே மாதம் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி முன்பு வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இவர் தன்னால் நடக்கவும் உண்ணவும் முடியவில்லை. என்னால் எழுத முடியவில்லை, உணவை உண்ண ஸ்பூனை கூட பிடிக்க முடியவில்லை. தனக்கு ஜாமீன் வழங்குமாறு ஸ்டான் சுவாமி கோரிக்கை விடுத்திருந்தார். ஆனாலும் அவருக்கு ஜாமீன் தரப்படவில்லை, மறுக்கப்பட்டது.

Recommended Video

    Who Is Stan Swamy? | அப்பா.. விண்ணை முட்டும் பழங்குடியினரின் அழுகை | Oneindia Tamil
    ஒரே வாரத்தில் அர்னாப்

    ஒரே வாரத்தில் அர்னாப்

    கடந்த 2018 ஆம் ஆண்டு கட்டட வடிவமைப்பாளரை தற்கொலைக்கு தூண்டியதாக ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். 14 நாட்கள் சிறையில் வைக்க உத்தரவிட்ட நிலையில் ஒரே வாரத்தில் இவரது ஜாமீன் மனுக்கள் மீது வேகமாக விசாரணை நடத்தப்பட்டது. அர்னாப் ஜாமீனும் பெற்றார்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட அர்னாப்பிற்கு உடனடியாக ஜாமீன் கிடைத்த நிலையில் 84 வயது வரை பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடி வந்த ஸ்டான் சுவாமி கடந்த 7 மாதங்களாக ஜாமீனுக்கு போராடி கடைசியில் பரிதாபமாக முடிவைத் தழுவிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+