மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக மாநில அரசுகள் தீர்மானம் நிறைவேற்றலாம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி
டெல்லி: மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக மாநில அரசுகள் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் அல்லது சர்ச்சைக்குரிய புதிய வேளாண் சட்டங்கள் போன்ற மத்திய சட்டங்களுக்கு எதிராக கேரளா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. இதற்கு எதிரான வழக்கில் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நுதிபதி , அவர்வு, மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக மாநில அரசுகள் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதில் எந்த தவறும் இல்லை என்றது.
தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு, இதுபற்றி கூறுகையில், மாநில அரசுகளின் தீர்மானங்கள் ஒரு சட்டமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் "கருத்துக்கள்" மட்டும் தான் என்றும் இது ஒன்றும் சட்டம் இல்லை என்றும் கூறியது.

சிஏஏவுக்கு எதிர்ப்பு
கடந்த டிசம்பர் 31, 2019 அன்று கேரள சட்டமன்றம் CAA சமத்துவத்திற்கான உரிமையை மீறும் சட்டம் என்று விமர்சித்தது. CAA ஐ ரத்து செய்யுமாறு கேரள சட்டமன்றம் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது. இதேபோல் பல்வேறு மாநிலங்களும் மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றின,

தீர்மானம்
இந்நிலையில் ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் போன்ற பல்வேறு மாநில சட்டமன்றங்களில், மத்திய அரசு பட்டியலின் கீழ் வரும் மத்திய சட்டங்களுக்கு எதிரான எந்தவொரு தீர்மானங்களையும் நிறைவேற்றுவதற்கு அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் கீழ் எந்த அதிகாரமும் இல்லை என்று கூறி ராஜஸ்தானை சேர்ந்த சம்தா அந்தோலன் சமிதி என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது

கோரிக்கை
அப்போது மூத்த வழக்கறிஞர் சௌமியா சக்ரவர்த்தி, சம்தா அந்தோலன் சமிதி அமைப்பின் சார்பாக ஆஜராகி வாதாடினார். அவர் தனது வாதத்தின் போது
ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட் வேண்டும் என்று வாதிட்டார்.

சட்டம் இல்லை
மேலும் கடந்த டிசம்பர் 31, 2019 அன்று கேரள சட்டமன்றம் CAA சமத்துவத்திற்கான உரிமையை மீறும் சட்டம் என்று விமர்சித்ததையும்,. CAA ஐ ரத்து செய்யுமாறு கேரள சட்டமன்றம் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதும் குறிப்பிட்டு வழக்கறிஞர் சௌமியா சக்ரவர்த்தி பேசினார். அப்போது தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே, "இது கேரள சட்டசபையில் உள்ள பெரும்பான்மையினரின் கருத்து ... அவர்கள் சட்டத்தை மீறுமாறு மக்களிடம் சொல்லவில்லை, சட்டத்தை ரத்து செய்யுமாறு அவர்கள் நாடாளுமன்றத்திடம் மட்டுமே கூறியுள்ளனர். இது ஒரு கருத்து மட்டுமே, சட்டத்தின் சக்தி இல்லை "என்றார்.

எப்படி சொல்ல முடியும்
அதற்கு சௌமியா சக்ரவர்த்தி"அவர்கள் (மாநில சட்டமன்றங்கள்) மத்திய அரசின் பட்டியலில் உள்ள விஷயங்களின் மீது சட்டங்களை உருவாக்க முடியாது என்பதால், அவர்கள் இதில் அவர்கள் கருத்தை வெளிப்படுத்த முடியாது என்றார். அப்போது தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே, கேரள சட்டமன்றத்திற்கு பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட சட்டத்தை ஒதுக்கி வைக்கும் அதிகாரம் இல்லை என்று நீங்கள் சொல்வதை ஏற்கிறோம் ஆனால் ஒரு கருத்தை வெளிப்படுத்த அவர்களுக்கு உரிமை இல்லையா? கேரள சட்டமன்றம், அந்த மாநிலத்திற்கு சம்பந்தம் உள்ள விஷயங்களில் சட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்று கட்டளையிடுவதில் தெளிவாக உள்ளது. இதை பற்றி அரசு கவலைப்படக்கூடாத என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும்? என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேட்டார். அத்துடன் இந்த விவகாரம் குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு மனுதாரரிடம் கேட்ட உச்ச நீதிமன்றம் வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.
-
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications