ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு சில பகுதிகளில் லாக்டவுன் தளர்வு.. மோடி சொன்ன முக்கிய விஷயம்
டெல்லி: சில மாவட்டங்களில், சில பகுதிகள் போன்றவற்றில், லாக்டவுன் கெடுபிடிகளை ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு அந்தந்த மாநிலங்கள் தளர்த்திக் கொள்ளலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
Recommended Video
தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களிடம் இன்று காலை நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, இன்றுடன் லாக்டவுன் காலம் நிறைவடைந்த நிலையில், அதை மே 3ம் தேதி வரை நீட்டிப்பதாக உத்தரவிட்டார்.
அதேநேரம் லாக்டவுன் தற்போது கடைப்பிடித்து வருவது போல ஒரே மாதிரியான தன்மையுடையதாக இருக்காது, என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

மாநில அரசுகள்
அவர் இதுகுறித்து கூறியதை பாருங்கள்: ஏப்ரல் 20-ஆம் தேதி வரை லாக்டவுன் விதிமுறைகள் கடுமையாக அனைத்து இடங்களிலும் கண்காணிக்கப்படும். 20ம் தேதிக்குப் பிறகு கொரோனா வைரஸ் பாதிப்பு வராத இடங்கள், போன்றவற்றை கவனித்து, அந்தந்த மாநில அரசுகள் லாக்டவுன் விதிமுறைகளை தளர்த்தி, முக்கியமான பணிகளை மறுபடியும் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கலாம்.

கெடுபிடி
ஆனால், உரிய நிபந்தனைகளுடன்தான் இந்த சலுகை வழங்கப்பட வேண்டும். அதுவரை அதாவது ஏப்ரல் 20ஆம் தேதி வரை, நாடு முழுக்க ஒரேமாதிரியான, கெடுபிடிகளுடன் தான் லாக்டவுன் கடைபிடிக்கப்படும். லாக்டவுன் விதிமுறைகளை மீறினால் அந்த தளர்வுகள் நீக்கப்பட்டு மறுபடி கெடுபிடிகள் அதிகரிக்கப்படும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கடுமையான ஊரடங்கு
மோடி அறிவிப்பை வைத்து பார்த்தால், ஏப்ரல் 20ம் தேதிவரை வழக்கத்தைவிட கெடுபிடி அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்தினால்தான், தொழில்துறை வளர்ச்சியடையும். தொழில்துறை செயல்படாமல் நாட்டில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை தடுக்கத்தான் ஏப்ரல் 20ம் தேதிவரை மிக கடுமையாக ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் மோடி.

நாளை அறிக்கை
நமது நாட்டில் ஆயிரக்கணக்கான மாவட்டங்கள், இதுவரை ஒரு கொரோனா பாதிப்பை கூட சந்திக்காமல் சாதித்துள்ளன. ஆனால் நாடு முழுக்க நிலவும் லாக்டவுனால் அந்த பகுதிகளும் முடங்கியுள்ளன. எனவே 20ம் தேதிக்கு பிறகு அத்தகைய பகுதிகளில் மட்டும், தளர்வை கொடுக்கலாம் என்பது மோடியின் திட்டமாக உள்ளது. பல வண்ணங்களில் நாட்டை பிரித்து லாக்டவுனை செயல்படுத்த கூடும் என்றார்களே, அதுபோன்ற அறிவிப்புதான் இது. நாளை இதற்கான முழு அறிக்கை வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications