தெருநாய்களை காப்பகத்துக்கு அனுப்பும் நடவடிக்கைக்கு தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: இந்தியாவில் தெரு நாய்கள் பிரச்சனை மிகப்பெரிய அளவில் விஷ்வரூபம் எடுத்து வருகிறது. மக்கள் பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பதால் இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. தெரு நாய்களை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அதிரடி உத்தரவு பிறப்பித்த நிலையில், அந்த வழக்கில் இன்று இடைக்கால உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. தெருநாய்களை காப்பகத்துக்கு அனுப்பும் நடவடிக்கைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. தெரு நாய்கள் அதிகரிப்பதால் பொது மக்களுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் தெரு நாய்கள் கடி அதிகளவு பதிவாகியுள்ளது. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

முக்கியமாக குழந்தைகளை அதிகம் குறி வைத்து தெரு நாய்கள் கடிக்கின்றன. இதனால் ரேபிஸ் நோய் பாதித்து உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. தெரு நாய்களின் பாதிப்பு இல்லாத மாநிலமே இல்லை. எப்படியாவது இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
தலைநகர் டெல்லியிலும் தெரு நாய்கள் பிரச்சனை அதிகளவு உள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் 37.15 லட்சம் நாய் கடி சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. சராசரியாக ஒரு நாளுக்கு 10,000 நாய் கடி சம்பவங்கள் நாடு முழுவதும் நடைபெறுகின்றன.
கடந்த வருடம் மட்டுமே நாய் கடி சம்பவத்தால் இந்தியாவில் 305 பேர் உயிரிழந்திருந்தனர். எனவே தெரு நாய்களை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி உச்ச நீதிமன்றம், தெரு நாய்களை காப்பகங்களில் இருந்து வெளியேற்றுவதற்கு தடை விதித்திருந்தனர்.
மேலும், டெல்லியில் உள்ள தெரு நாய்களை பிடித்து காப்பகத்தில் அடைத்து எட்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேநேரத்தில் நாய் பிரியர்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பிறகு இந்த வழக்கின் விசாரணை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்பாடு தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தனர். மேலும் ஆகஸ்ட் 22 ஆம் தேதியான இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தெரு நாய்களை காப்பகத்திற்கு அனுப்பும் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கருத்தடை செய்து மற்றும் தடுப்பூசி செலுத்திய பிறகு பிடிக்கப்பட்ட இடத்திலேயே தெருநாய்களை விடவும் உத்தரவிட்டுள்ளனர்.
முன்னதாக இரு நீதிபதிகள் அளித்த உத்தரவில், தெரு நாய்களை காப்பகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். இதை எதிர்த்து விலங்குகள் நல ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல் முறையீடு செய்திருந்தனர். அதில் நாய்களை காப்பகத்தில் அடைக்கும் உத்தரவுக்கு தடை கேட்டிருந்தனர். அதன்படி தெரு நாய்களை காப்பகத்திற்கு அனுப்பும் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
-
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை.. காரணம் வேற யாரும் இல்லை காங்கிரஸ் தான்.. அடுத்து என்ன? -
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்? -
69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்தா? சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை.. விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications