ரயில் டிக்கெட் எடுக்க சமஸ்கிருதம் தெரியணுமா?.. மதுரை எம்பி சு வெங்கடேசன் சுளீர் கேள்வி
டெல்லி: ரயில் டிக்கெட் எடுக்க சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா என மதுரை எம்பி சு வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் ஐஆர்சிடிசி ரயில் பயணச் சீட்டு முன் பதிவுக்குள் போனால் ஜெனரல், லேடீஸ், லோயர் பெர்த் அல்லது சீனியர் சிட்டிசன், தட்கல் என்ற தெரிவுகள் இருக்கும்.
மேலும் திவ்யாங் என்ற ஒரு தெரிவும் இருக்கும். திவ்யாங் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு தெய்வீக உறுப்பு கொண்டவர் என தமிழில் பொருளாம். மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதமர் வைத்த பெயர் அது.

அதிகாரிகளின் விசுவாசம்
அதிகாரிகளின் விசுவாசமோ என்னவோ ஐஆர்சிடிசி முன் பதிவில் அதை சொருகி விட்டார்கள். இந்தியாவில் சமஸ்கிருதத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் 14135 பேர்தான். தமிழ் 8 கோடி பேரின் தாய்மொழி. ஒன்றிய அரசும் அதன் அதிகாரிகளும் நினைத்தால் 14000 பேரின் தாய்மொழியை புரிகிறதா புரியாதா என்று கூட யோசிக்காமல் திணிக்க முடியும்.

தொழில்நுட்ப மேம்பாடு
ஆனால் இவ்வளவு தொழில்நுட்ப மேம்பாடு இருந்தாலும் 8 கோடி பேரின் தாய்மொழியை முன்பதிவுக்கான தெரிவு மொழியில் இணைக்க முடியாது. ஆங்கிலமே திணற அடிக்கும் போது அறவே புரியாத மொழியை எல்லாம் திணிப்பதை கைவிடுங்கள். வார்த்தைகளில் புனிதம் இருந்தால் போதாது. நோக்கம் புனிதமாக இருக்க வேண்டும் என சு வெங்கடேசன் தனது போஸ்ட்டில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்தை ஆதரித்து ட்வீட்
இவரது கருத்துக்கு பலர் ஆதரித்தும் எதிர்த்தும் ட்வீட் போட்டுள்ளனர். எங்கள் மாநிலத்தின் மொழி தமிழ் தான் தமிழர்களுக்கு தமிழ் தான் தாய்மொழி அந்தந்த மதத்திற்கு அந்தந்த இனத்திற்கு அவர்கள் மொழி முக்கியம் எங்களுக்கு சமஸ்க்ரிதம் தேவையில்லை எங்களுக்கு இந்தி பேசிய அவசியமில்லை எங்கள் மீது திணித்தால் நாங்கள் தனி நாடு பெறுவது மிகவும் தொலைவில் இல்லை என்கிறார் ஒரு வலைஞர்.

சொலவடை
கோவையில் ஒரு சொலவடை உண்டு" வெறும் வாய் பேசி, கடைவாய் குழியானதுதான் மிச்சம்" என்று. ஒன்றிய அரசின் செயல்பாடும் இதைபோல்தான் உள்ளது. உலக அரங்கில் பேசும்போது, கனியன் பூங்குன்றனார், திருவள்ளுவருடைய படைப்புகள் பறைசாற்றப்படும். தனது நாட்டில் தமிழுக்கு மரியாதை இல்லை. தலையெழுத்து என்கிறார் இந்த வலைஞர்.

கருத்துக்கு எதிர்ப்பு
தட்கல் என்பது ஆங்கிலமா? அதையும் உறுப்பினர் அவர்கள் கேட்க வேண்டும் என்கிறார் இந்த வலைஞர்.

அஸ்ஸாம் மக்களுக்கு புரியுமா
ஐயா நண்பரே தட்கல் tatkal
என்ற சொல் இந்தி வார்த்தை immediately உடனே என்று பொருள் படும் ஆங்கில வார்த்தையல்ல தட்கல் ஏற்றுக் கொண்டீர்கள் divyaang என்ன தவறு சரி மாற்று திறனாளி வார்த்தை டெல்லி அசாம் மக்களுக்கு புரியுமா என்கிறார் இந்த வலைஞர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications