வேள்பாரி ஞானபீட விருதுக்கு தகுதியானது.. சு.வெங்கடேசன் இன்னொரு கல்கி.. நாடாளுமன்ற எம்பிக்கள் பாராட்டு
டெல்லி: டெல்லி கான்ஸ்டிடியூஷனல் கிளப்பில் வீரயுக நாயகன் வேள்பாரி நாவல் வெற்றி விழா கூடுகை நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 60க்கும் மேற்பட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வரவேற்புரையாற்றினார். தென் சென்னை திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.
திண்டுக்கல் எம் பி சச்சிதானந்தன் நின்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே பேசுகையில், சு.வெங்கடேசன் தெளிவான சிந்தனையுடன் கருத்துகளை நாடாளுமன்றத்தில் எடுத்துவைக்கும் சிறந்த நாடாளுமன்றவாதி. நம்மில் ஒருவர் புரிந்துள்ள சாதனைக்காக வெற்றி விழா நடத்துவது மகிழ்ச்சியை தருகிறது என்று தெரிவித்தார்.

வேள்பாரி வெற்றி விழா நிகழ்வு
தொடர்ந்து சிபிஎம் எம்பி எம்.ஏ. பேபி பேசுகையில், 1200க்கும் அதிகமான பக்கங்களை கொண்ட வேள்பாரி நாவல் வாழ்க்கையின், மனிதர்களின் பல்வேறு அம்சங்களை பேசுகிறது. டால்ஸ்டாய் எழுதிய போரும், அமைதியும் நாவலை நினைத்து பார்த்தேன். போருக்கு தொடர்பில்லாத முக்கிய இலக்கிய படைப்புகளை ஆராய்ந்து பார்த்தேன். மகாபாரதமும், ராமாயணமும் போருக்கு தொடர்புடையதாக உள்ளன.
வேள்பாரி நாவல் மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்படுவதை அறிந்தேன். மொழியாக்கம் செய்து முடிக்கப்பட்டவுடன் வேள்பாரி வழங்க டிசி புக்ஸ் பதிப்பகத்திடம் கேட்டுள்ளேன். முல்லைக் கொடி என்பது முல்ல வல்லி என மலையாளத்தில் வழங்கப்படுகிறது. படர தவித்த முல்லைக் கொடிக்கு தேரை வேள்பாரி தந்துள்ளான்.
பஷீரும், சு.வெங்கடேசனும்
இதுபோன்ற படைப்புகளை வாசிக்கும்போது, வைக்கம் முகமது பஷீரின் மிகச் சிறந்த நாவல்களை நினைத்து பார்க்காமல் இருக்க முடியாது. வைக்கம் முகமது பஷீரின் மலையாள படைப்புகளை ஐரோப்பிய பண்டிதர் ஆஷ்ரப் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். பல்வேறு அந்நிய மொழிகளிலும் படைப்புகள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
வைக்கம் முகமது பஷீரின் படைப்புகளில் உள்ள அம்சங்களில் ஒன்றான பண்பாட்டு வளர்ச்சி குறித்த உரையாடல் போலவே சு. வெங்கடேசன் எழுதியுள்ள வேள்பாரியிலும் இடம்பெற்றுள்ளது. வைக்கம் முகமது பஷீரின் படைப்புகளில் அறம், நற்செயல்கள் குறித்த கேள்விகள் இடம்பெற்றுள்ளன. நீரின்றி தவிக்கும் செடிக்கு நீரை ஊற்றி காப்பாற்றுவது போல பிறருக்கு நற்செயல்களை செய்ய முடியும் என்கிறார் பஷீர்.
இதுபோலவே, மனிதத்தன்மையின் மேன்மை வேள்பாரியில் இடம்பெற்றுள்ளது. மலையாளத்தில் வேள்பாரி வெளியாகும்போது, நிச்சயம் வைக்கம் முகமது பஷீரும், சு. வெங்கடேசனும் என்ற தலைப்பில் மதிப்புரை எழுத திட்டமிட்டுள்ளேன். சு. வெங்கடேசனின் படைப்புகள் பல்வேறு மொழிகளில் குறிப்பாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு உலக வாசகர்களை எட்டினால், ரவீந்திர தாகூருக்கு கிடைத்த நோபல் பரிசு சு.வெங்கடேசனுக்கு அளிப்பது குறித்து பரீசிலிக்கப்படும் என்றார்.
கனிமொழி பேச்சு
நாடாளுமன்ற திமுக தலைவர் கனிமொழி பேசுகையில், சரித்தர நாவலை சுவாரசியமாக, வாசிக்கும் வகையில் எழுதி ஒருவர் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை விதையை வேள்பாரி விதைத்துள்ளது. தனிப்பட்ட மனிதனாக, எழுத்தாளனாக நம்பக்கூடிய விஷயங்களை எதிராக இல்லாமலும், சரித்திரத்துக்கு நேர்மையாகவும் சமன்படுத்தி வேள்பாரி நாவலை வெற்றிப் படைப்பாக்கியுள்ளார்.
இவ்வாறு எழுதக் கூடிய, சிந்திக்ககூடியவர்கள் நாடாளுமன்றத்தில் பணியாற்றும்போது பழமைவாத சிந்தனையை மாற்றுபவர்களாக உள்ளனர். தற்போதைய சூழலில் பெண்களை பார்ப்பதிலும், அவர்களை நடத்துவதிலும், விமர்சன கருத்துகளை தெரிவிப்பதிலும் இப்படியாக சிந்திக்ககூடியவர்கள் சமூக தடைகளை கடந்து உடைத்து கொண்டுள்ள மனிதன் நாடாளுமன்றத்திலும், அரசியலிலும் பணியாற்றும்போது புதிய சுவாசத்தை தருகிறது. இதற்காக சு. வெங்கடேசன் சார்ந்துள்ள மார்க்சிய இயக்கத்துக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன் பேசுகையில், தோழர்கள் நாவல்கள் எழுதினால் அவை போராட்ட நாவல்களாக இருக்கும். காவிய நாவலை எழுதுவது அரிது. பெருமைக்குரிய நாவலை எழுதியமைக்காக தலைநகர் டெல்லியில் நடைபெறும் இந்த வெற்றிவிழா சு. வெங்கடேசனுக்கும் மட்டும் பெருமையல்ல, தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கிறது. நாடாளுமன்றத்தின் பேச்சுகள் சுவையாகவும், தொகுதி மக்களுக்காகவும், தமிழர்களுக்காகவும் பேசி கலைஞர் கருணாநிதியை போல சு. வெங்கடேசனும் மாற்றி யோசிக்கிறார் என்றார்.
ஆ.ராசா வாழ்த்து
தொடர்ந்து நீலகிரி திமுக எம்பி ஆ.ராசா பேசுகையில், கொள்கை பற்றாளர், தத்துவ சிந்தனையாளராக சு. வெங்கடேசன் திகழ்ந்து வருகிறார். பொதுவுடமை சிந்தனை மட்டுப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டிலிருந்து காக்கும் வகையில் கம்யூனிஸம் இந்த மண்ணுக்கு தேவை என்ற வலிமைமிக்க வாதத்திறமையை கொண்டுள்ளார். அவரது எழுத்துகள் சமூகத்தை நாகரிகம், வளர்ச்சி, முற்போக்கு ஆகிய அம்சங்களில் ஓர் அங்குலமாவது உயர்த்த வேண்டும் என்ற எண்ண கிடக்கையை கொண்டுள்ளன.
சக எம்பி என்பதில் பெருமையடைகிறேன். பட்டாளிகளிடம் அடிமைச் சங்கிலியை தவிர இழப்பதற்கு ஏதுமில்லை என மார்க்ஸ் சொல்கிறார். எத்தடையும் இல்லாமல் அவரை இயங்க கம்யூனிஸ இயக்கம் வழங்கியிருக்கிறது. அவரை வாழ்த்தி, அவரை வார்த்தெடுத்த இயக்கத்துக்கும் பாராட்டுகள். எழுத்து எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக பிலிபைன்ஸ் நாட்டு விடுதலை வீர போராளி கம்யூனிஸ இயக்கத்தை சேர்ந்தவர். விடுதலைக்காக போராடினார். மரண தண்டனை வழங்கப்பட்டது.
கடைசி ஆசை கேட்டபோது, எனக்கு எழுதுவதற்கு எதுவுமில்லை எழுதாதீர்கள். எங்கே அடக்கம் செய்கிறீர்களோ அங்கு எப்போதாவது சிறு மலர் பூத்திருக்கும், இந்த நாடு விடுதலை அடைகிறபோது, அதற்காக நான் போராடினேன் என்று யாராவது கருதினால், எனது கல்லறையில் பூ பூத்திருக்கும், அந்த பூவிற்கு ஒரு முத்தம் கொடுங்கள் அப்போது தேசம் விடுதலையடைந்தமைக்கான பொருளை, மகிழ்ச்சியை உள்ளே இருக்கும் நான் உணர்வேன் என எழுதியுள்ளான்.
ப.சிதம்பரம் பாராட்டு
அப்படிப்பட்ட எழுத்துவீரியம் கொண்ட கவிஞனை வாழ்த்த கடமைப்பட்டுள்ளேன். சாதியால், மதத்தால் எவ்வித தடையுமின்றி இயங்கும் சு. வெங்கடேசனின் குடும்பத்தையும், அவரது இயக்கத்தையும் வாழ்த்துகிறேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் பேசுகையில், தமிழ் இலக்கிய மாணவர்கள், பண்டிதர்கள் மட்டுமே வாசிக்க கூடியதாக காவல் கோட்ட நாவல் உள்ளது. ஆனால் மிக எளிமையான தமிழில் வேள்பாரி நாவலை சராசரி வாசகர் உள்ளிட்ட அனைவரும் வாசிக்கும் வகையில் படைத்துள்ளார்.
இந்த இரு படைப்புகளுக்கும் இடையே வெவ்வேறு பாணியை சு. வெங்கடேசன் பின்பற்றியுள்ளார். கல்கி பொன்னியின் செல்வம் நாவலை 75 ஆண்டுகளுக்கு முன் 1950-54 காலக்கட்டத்தில் படைத்தபோது நாவலுக்கான சித்திரங்களை வரைந்தவர் மணியம். 75 ஆண்டுகளுக்கு பிறகு கல்கியின் எளிமையான உரைநடை பாணியை சு. வெங்கடேசன் கைகொண்டுள்ளார். அவரது வேள்பாரி நாலுக்கு சித்திரங்களை வரைந்தவர் மணியத்தின் மகன் செல்வம் என்பது வரலாறு திரும்பியுள்ளதை காட்டுவதுடன், மற்றொரு கல்கியாக சு. வெங்கடேசன் நம்மிடையே வீற்றுள்ளார்.
பரம்பு மலை எனது தொகுதியை ஒட்டியிருப்பதால் எனக்கும், வேள்பாரிக்கும் உறவு இருக்கிறது. வேந்தர்களுக்கும், வேளிர்களுக்கும் நடக்கும் போராட்டமே வேள்பாரி நாவல். சேர, சோழ பாண்டிய அரசர்கள் வலிமையாக இருந்தபோது, அவர்களுக்கு எதிராக நேருக்கு நேர் நின்ற பாரி தேர்வு செய்யப்படாத அரசனாக இருந்தான். பாரி வாழ்ந்த பகுதி அரசநாடு அல்ல. அவரும் அரசனல்ல. வேளாண் குடிகளின் தலைவனாக இருந்தவன். வேந்தர்களிடமிருந்து எப்படி தற்காத்தான் என்பதை சுவையான கதை, சுவையான வர்க்க போராட்டத்தை வர்க்க போராட்டம் என்ற சொல்லாமல் இந்த நாவல் சித்திரிக்கிறது.
அதனால்தான் அத்தகைய வேளிர் குடி தலைவன் குறித்து சு. வெங்கடேசன் எழுத முடிவு செய்து வேள்பாரி நாவலை படைத்து தந்துள்ளார். தொடர்ந்து விவசாயிகளுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும் போராடுபவராகவும், அவர்கள் குறித்து எழுதுபவராகவும் சு. வெங்கடேசன் இருக்க வேண்டும். வளர்ச்சியடைந்த அல்லது வளர்ச்சி பெறும் சமூகத்தில் எப்போது பாட்டாளி வர்க்கம் இருக்கும். பட்டாளி வர்க்கமும் வசதி படைத்ததாக மாறும். உழைக்கும் வர்க்கம் உழைத்து கொண்டே இருக்கும். அவை சுரண்டப்பட்டு கொண்டே இருக்கும்.
ஞானபீட விருது
நிலவுடைமையாளர்கள் பன்னாட்டு நிறுவன உரிமையாளர்களாக உருமாற்றம் பெற்றுள்ளனர். இத்தகைய வர்க்க போராட்டம் முடிவுற்று நடைபெறுவதாகவுள்ளது. போராட்டங்களை பதிவு செய்யும் மிகச்சிறந்த எழுத்தாளராக சு. வெங்கடேசன் திகழ்கிறார். அவர் பாரி போன்ற சங்ககாலத்தை மட்டும் பதிவு செய்பவராக இருக்கக்கூடாது. தற்கால போராட்டங்களையும் படைப்களில் பதிவு செய்ய வேண்டும். எழுத்தாளர் அகிலனுக்கு சித்திரப் பாவை' என்ற நாவலுக்கு 1975-ஆம் ஆண்டு ஞானபீட விருது கிடைத்தது.
27 ஆண்டுகளுக்கு பிறகு எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது கிடைத்தது. தமிழ் எழுத்தாளர்கள் இருவருக்கும் மட்டுமே இதுவரை இந்த விருது கிடைத்துள்ளது. ஞானபீட விருது பரீசிலனை செய்யும் நடுவர்கள் மீண்டும் தமிழ் எழுத்தாளர்களை பரிசீலனை செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது. விருது கொடுக்கப்பட்டு 23-ஆவது ஆண்டுகள் கடந்துவிட்டது. இப்பொழுது பரிசீலனையை தொடங்கினால் தான் 27ஆவது ஆண்டு ஞானபீட விருது கிடைக்கும். இந்தாண்டு ஞானபீட விருதுக்கு சு. வெங்கடேசனின் படைப்பும் எடுத்துக் கொள்ளப்படும் என நம்புகிறேன்.
சமகால விமர்சனங்களை தவிர்க்க செய்யும் வாய்ப்பு சரித்தர நாவல்களை எழுதுவதில் உள்ளது. ஒவ்வொரு தலைமுறையும் சரித்திரம் படைத்து கொண்டிருக்கிறது. சமகாலத்தில் நடைபெறும் போராட்டங்களையும் சு. வெங்கடேசன் எழுத்துகளில் பதிவு செய்ய வேண்டும். சரித்தர நாவலை எழுத கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. சான்றுகளையும், கல்வெட்டுகளையும், ஸ்தல புரணாங்களையும், ஓலைச்சுவடிகளையும், வரலாற்று நூல்களையும் படித்தும் எழுதிய வேண்டும் என்பதை கல்கி குறித்து வாசிக்கும் போது அதை அறிய முடிகிறது என்று தெரிவித்தார்.
டிம்பிள் யாதவ் வாழ்த்து
தொடர்ந்து சமாஜ்வாடி கட்சி எம்பி டிம்பிள் யாதவ் பேசுகையில், சு.வெங்கடேசனின் வேள்பாரி நாவலை ஹிந்தியில் வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம். அகிலேஷ் யாதவ் சார்பில் வாழ்த்துகளையும, பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன் என்றார். பின்னர் சிபிஎம் எம்பி ஜான் பிரிட்டாஸ், தனது உரையில் பண்பாட்டு அம்சங்களை ஆயுதமாக்கி, சமூகத்தை மதவாதமாக்கி, போர்களை ஊக்குவிக்கும் சூழலில் சு. வெங்கடேசன் எழுதியுள்ள வேள்பாரி போன்ற வரலாற்று நாவல் படைப்பு மக்களின் பண்பாட்டையும், வரலாற்றையும் அறிந்து கொள்ள தேவையாகிறது என்றார்.
சு.வெங்கடேசன் பேச்சு
பின்னர் சு. வெங்கடேசன், இயற்கைக்கும், மனித பேராசைக்கும் இடையில் நடக்கிய இன்றைய போராட்டத்தின் ஆதி வடிவமாக வேள்பாரி நாவலை படைத்துள்ளேன். இயற்கைக்கும், மனித பேராசைக்கும் நடக்கும் போராட்டம் முடிவுறப் போவதில்லை. தற்காலத்தில் மேலும் உக்கிரமாகியுள்ளது. வேள்பாரி முதலாளித்துவத்தின் எதிரி என இங்கு சொன்னபோது, ப. சிதம்பரம் இது முதலாளித்துவத்தின் எதிரி அல்ல. ஏகாதிபத்தியத்தின் எதிரி என அழகாக சொன்னார்.
இயற்கைக்கும், மனித பேராசைக்கும் நடக்கும் போராட்டத்தில் இயற்கையை நேசிக்கிற, இயற்கையோடு சமநிலையை பேணுகிற எல்லா மனித உயிர்களும் படிக்க வேண்டிய இலக்கியமாக வேள்பாரி நாவல் அமைந்துள்ளது. ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் நடைபெற்று வருகிறது. மலையாளத்தில் விரைவில் வெளிவரவுள்ளது. இந்த நிகழ்வு அதற்கு உத்வேகம் அளிக்கிறது. இலக்கியத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு நம்பிக்கை அளிக்கிறது என்று தெரிவித்தார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications