அசிங்கம்.. சாஷ்டாங்கமாக காலில் விழுந்துட்டீங்களே.. மோடியை ஆட வைத்த சு.சாமி.. பரபரப்பு அட்டாக்!
டெல்லி: இஸ்லாமிய வெறுப்பு பிரச்சார விவகாரத்தில் கத்தாரிடம் இந்தியா விளக்கம் அளித்த நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சமீபத்தில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் இஸ்லாமிய இறை தூதுவர் நபிகளை பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா கடுமையாக இகழ்ந்து பேசினார். இவரின் பேச்சு சர்ச்சையான நிலையில் பாஜகவில் இருந்து நுபுர் சர்மா நீக்கப்பட்டார்.
இந்த வீடியோ உலகம் முழுக்க வைரலான நிலையில், கத்தார், குவைத், ஈரான், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. இதையடுத்து இந்தியா சார்பாக கத்தார் அரசிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. இவர்களின் கருத்துக்கும் இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கும் தொடர்பு இல்லை. இவை கலகத்தை ஏற்படுத்தும் (fringe element) நபர்களின் கருத்துக்கள்தான் என்று இந்திய அரசு விளக்கம் அளித்தது.

விளக்கம்
இந்த நிலையில் இந்தியா கத்தாரிடம் விளக்கம் அளித்ததை பலர் விமர்சித்து வருகின்றனர். ஒரு பாஜக நிர்வாகி பேசிய கருத்துக்காக இந்தியா தலைகுனிய வேண்டுமா? பாஜக நிர்வாகி ஏதாவது பேசுவார், அதற்கு இந்தியாவின் மொத்த வெளியுறவுத்துறையும் பொறுப்பேற்க வேண்டுமா? என்ன நியாயம் இது என்று நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதோடு நுபுர் சர்மா மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள்.

இந்தியா தலைகுனிவு
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில், மோடியின் 8 ஆண்டுகள் ஆட்சியில், பாரத மாதா தலையை அசிங்கத்தில் தொங்க போடும் நிலை ஏற்பட்டுவிட்டது. நாம் சீனாவிடம் லடாக்கில் மண்டியிட்டுவிட்டோம், ரஷ்யர்களிடம் அடிபணிந்து விட்டோம், அமெரிக்காவிடம் குவாட் மீட்டிங்கில் பணிந்து விட்டோம்.. இதனால் பாரத மாதா தலையை அவமானத்தில் தொங்க போடும் நிலை ஏற்பட்டுவிட்டது.

கத்தார்
ஆனால் இப்போது கத்தார் என்ற சின்ன நாட்டிடம் இந்தியா சாஷ்டாங்கமாக காலில் விழுந்து விட்டது. இந்திய வெளியுறவுக் கொள்கையின் சீரழிவு இது என்று சுப்பிரமணியன் சாமி விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடியை இதற்கு முன் பல முறை சுப்பிரமணியன் சாமி விமர்சனம் செய்துள்ளார். முன்னதாக அதோடு எனக்கும் மோடிக்கும் தனிப்பட்ட விரோதம் இல்லை. கொள்கை முரண்பாடு மட்டுமே.
Recommended Video

சுப்பிரமணியன் சாமி
என்னை பற்றி தரைகுறைவாக பேச அவர் ஆட்களை ட்விட்டரில் நியமித்து இருக்கிறார். என்னுடைய குடும்பத்தை பற்றியும் தரக்குறைவாக அவர்கள் பேசுகிறார்கள். நான் கொள்கை முரண்பாடுகள் பற்றி மட்டுமே ட்விட் செய்வேன். என் மீதான விமர்சனங்கள் நிற்கவில்லை என்றால் நானும் விமர்சனங்களை நிறுத்த மாட்டேன் என்று சுப்பிரமணியன் சாமி குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த முறை பிரதமர் மோடியை மிக கடுமையாக சு. சாமி விமர்சித்து உள்ளார்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications