Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகுலின் இந்திய குடியுரிமையை உடனே ரத்து செய்யுங்க.. நீதிமன்றத்தில் முறையிட்ட சுப்பிரமணியன் சுவாமி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் இந்தியக் குடியுரிமையை ரத்து செய்ய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். எதற்காக இந்த வழக்கு.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

பாஜகவின் மூத்த தலைவராக உள்ளவர் சுப்பிரமணியன் சுவாமி.. முன்னாள் மத்திய அமைச்சராக இவர், கடந்த காலங்களில் சட்ட ரீதியாகப் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார். தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கூட இவர் கொடுத்தது தான்.

subramanian swamy rahul gandhi


இதற்கிடையே இவர் இப்போது ராகுல் காந்தியின் இந்தியக் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இதற்கு என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

வழக்கு: சு
ப்பிரமணியன் சுவாமி கடந்த 2019 ஆம் ஆண்டில் உள்துறை அமைச்சகத்திற்குக் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில் 2003ஆம் ஆண்டில் பிரிட்டனின் பேக்அப்ஸ் என்ற நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அதன் இயக்குநர்கள் மற்றும் செயலர்களில் ஒருவராக இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

கடந்த 2005 மற்றும் 2006ம் ஆண்டுகளில் அந்த நிறுவனம் தனது வருடாந்திர ரிட்டர்ன்கள் தாக்கல் செய்துள்ளது. அதில் ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமை கொண்ட நபர் எனக் குறிப்பிடப்பட்டு இருப்பதாகச் சுப்பிரமணியன் சுவாமி குற்றஞ்சாட்டினார். கடந்த 2009 பிப்ரவரி 17ம் தேதி இந்த பேக்ஆப்ஸ் நிறுவனம் மூடப்பட்ட போது சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்திலும் ராகுல் காந்தியின் குடியுரிமை மீண்டும் பிரிட்டிஷ் என்றே குறிப்பிடப்பட்டு இருந்ததாகச் சுப்பிரமணியன் சுவாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விதிமீறல்: இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 9 மற்றும் இந்தியக் குடியுரிமைச் சட்டம், 1955 ஆகியவற்றை மீறுவதாக உள்ளதாகச் சுப்பிரமணியன் சுவாமி குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்குமாறு கடந்த 2019 ஏப்ரல் 29ம் தேதி உள்துறை அமைச்சகம் ராகுல் காந்திக்குக் கடிதம் எழுதியதாக தெரிகிறது.

நடவடிக்கை இல்லை: இருப்பினும் 5 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், இதுவரை உள்துறை அமைச்சகம் ராகுல் காந்தி மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே இப்போது சுப்பிரமணியன் சுவாமியின் புகாராகும். நமது நாட்டின் சட்டம் ஒரு நபர் இரண்டு குடியுரிமை பெற்று இருப்பதைத் தடை செய்கிறது. இதன் காரணமாகவே ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க உள் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு சுப்பிரமணியன் சுவாமி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

ராகுல் காந்தி:
கடந்த 2004 முதல் ராகுல் காந்தி ஐந்து முறை எம்பியாக இருந்துள்ளார். 2004 முதல் 2019 வரை அவர் அமேதி தொகுதியை எம்பியாக இருந்தார். 2019இல் அவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், அமேதியில் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார். இருப்பினும் அவர் கேரளாவின் வயநாட்டில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த முறை ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி, வயநாடு என இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்றார். இருப்பினும், ஒருவரால் இரண்டு தொகுதிகளில் வெல்ல எம்பியாக இருக்க முடியாது என்பதால் அவர் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார். இப்போது ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவராக உள்ளது குறிப்பிடத்தக்கது. வயநாடு தொகுதியில் ராகுல் காந்திக்குப் பதிலாகப் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+