டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திரும்பி வரத் தயாராகும் டிக்டாக்.. மவுனம் காக்கும் மத்திய அரசு.. சு.சாமி ட்வீட்!

Google Oneindia Tamil News

டெல்லி: டிக்டாக் புதுவடிவம் பெற்று இந்தியாவுக்குள் வர தயாராக இருக்கிறது. ஆனால் மத்திய அரசுதான் இன்னும் லடாக் விவகாரத்தை மனதில் வைத்து கொண்டு அமைதி காக்கிறது என பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு பத்திரிகை செய்தியை சுட்டிக் காட்டி தனது ட்விட்டரில் பதிவு செய்கையில், புது நிர்வாகத்தின் கீழ் டிக்டாக் இந்தியாவுக்கு வர தயாராக இருக்கிறது? டிக்டாக் என்ற பெயருடனே வர தயாராக இருக்கிறது.

 Subramanian Swamy says about reconstructing Tiktok

மத்திய அரசை கவர பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. ஆனால் மத்திய அரசுதான் லடாக் விவகாரத்தை மனதில் வைத்துக் கொண்டு அமைதி காக்கிறது என தனது ட்விட்டரில் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் டிக்டாக்கின் பைட் டான்ஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது தொடர்பாக கடந்த வாரம் மும்பை உயர்நீதிமன்றத்தில் எந்தவித உடனடி தீர்வும் கிடைக்கபெறவில்லை.

டிக்டாக்கை புது வடிவத்தில் இந்தியாவிற்கு கொண்டு வர பைட் டான்ஸ் நிறுவனம் முயற்சித்து வருகிறது. டிக்டாக்கின் இந்தியாவின் தலைவர் நிகில் காந்தியும் தொழில்நுட்ப குழுவினரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த நிறுவனத்தில் விற்பனை பிரிவு மற்றும் விளம்பர பிரிவுகளில் பல்வேறு ஊழியர்கள் வெளியேறிவிட்டனர்.

English summary
BJP MP Subramanian Swamy says about reconstructing Tiktok.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X