நான் சொன்னதை மோடி அப்போதே கேட்டிருக்கலாம்! பீஷ்மருக்கு ஏற்பட்ட கதி தான்..! சு.சுவாமி..!
டெல்லி: விவசாய சட்டங்கள் மீதான மோடியின் யு-டர்ன் இந்தியாவின் பொருளாதார சீர்திருத்த வரலாற்றில் பின்னடைவு என்று குறிப்பிட்டுள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, விவசாயச் சட்டங்களை விரும்பும் விவசாயிகள் ஏற்கலாம் என்று ஆப்ஷன் கொடுத்திருக்கலாம் என்று நான் கூறியிருந்தேன், எனது பரிந்துரையின்படி மோடி செயல்பட்டிருக்க வேண்டும். இப்போது முழுமையாக திரும்பப் பெறுவதன் மூலம் அவர் எதிர்க்கட்சிகளின் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட் பதிவுடன் ஆங்கிலத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருப்பதாவது:
இந்தியாவின் விவசாய சீர்திருத்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி யு-டர்ன் எடுத்ததால் ஐந்து தாக்கங்கள் ஏற்படலாம். இது இந்தியா இதுவரை கண்டிராத யு-டர்ன் ஆகும்.
கடந்த வருடம் நவம்பரில் கொண்டு வரப்பட்ட விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் (திருத்தம்) சட்டம் மற்றும் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் விலை உறுதி மற்றும் விவசாயிகள் சேவைகள் சட்டம் 2020க்கான விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஆகியவற்றை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மோடியின் அனைத்து அறிவிப்புகளையும் போலவே, யு-டர்ன்னும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் வந்துள்ளது. குருநானக் ஜெயந்தி, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேச தேர்தல்கள் போன்றவை இதையொட்டி வருகின்றன.

சிறப்பான திட்டம்
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி)க்குப் பிறகு, இது மோடியின் தொலைநோக்கு சீர்திருத்தமாக இருந்தது இந்த 3 வேளாண் சட்டங்களாகும். ஜிஎஸ்டி இந்தியாவில் மறைமுக வரிகளின் முகத்தை மாற்றி, அவற்றை எளிதாக்குகிறது (இன்னும் செயல்முறை சீர்திருத்தங்கள் தேவை). மூன்று விவசாய சட்டங்கள் விவசாயத்தின் செயல்பாட்டை, ஏழை விவசாயிகளுக்கு ஆதரவாக மாற்றியிருக்கும். பிரதமர் பிவி நரசிம்ம ராவ் அவர்களின் தொழில் கொள்கை 1991 அறிக்கை உற்பத்தி மற்றும் சேவைகளை உயர்த்தி நாட்டை எப்படி முன்னேற்றியதோ, அதேபோல, பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று விவசாய சட்டங்கள் விவசாயத்தையும், விவசாயிகளையும் முன்னேற்றியிருக்கும்.

25 வருடங்களுக்கு பேச மாட்டார்கள்
இந்த யு-டர்னின் சோகமான பகுதி என்னவென்றால், இந்தியாவின் விவசாயம் பணக்கார விவசாயிகள், வணிகர்கள் மற்றும் இடைத்தரகர்களின் காலடியில் நசுக்கப்படப்போகிறது. இனி, அடுத்து வரும், கால் நூற்றாண்டுக்கு எந்த அரசியல் கட்சியும் இந்த சீர்திருத்தங்களைத் தொடத் துணியாது. இது இந்தியாவுக்கு பெரிய இழப்பு.

தொண்டர்களை கைவிட்ட மோடி
இரண்டாவதாக, மூன்று விவசாய சட்டங்களை ஆதரித்தவர்கள் கைவிடப்பட்டுள்ளனர். அமைச்சரவை அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, பாஜகவின் அடிப்படை தொண்டனும் இப்போது கை விடப்பட்டுள்ளார். பிரதமர் மோடி அறிவிக்கும் விஷயங்களில் உறுதியாக இல்லை என்ற மெசேஜ் போயிருக்கும். தொண்டர்கள் சொல்வதை பாஜக தலைமை கேட்க வேண்டும்.

அதிக வருமானம் ஈட்ட நினைப்பார்கள்
மூன்று விவசாயச் சட்டங்களை எதிர்த்தவர்கள் இனி சும்மா இருக்க மாட்டார்கள். அவர்களில் பெரும்பாலானோர், காங்கிரஸ் ஆதரவு தலைவர்களாக உள்ளனர் என்பதை கவனிக்க வேண்டும். நாட்டின் வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்து மக்களின் ரத்தத்தை அவர்கள் உறிஞ்சப்போகிறார்கள். பணக்கார விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் இடைத்தரகர்கள் அதிக வருமானத்தை பெற காய் நகர்த்துவார்கள்.

தேர்தலுக்கும் உதவாது
நான்காவதாக, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் இந்த யு-டர்ன் பாஜகவுக்கு உதவுமா என்றால் உதவாது. போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய தலைவர்கள் இது தங்கள் வெற்றி என்று வாக்குகளை தங்கள் பக்கம் திருப்புவார்கள். உயிரிழந்த விவசாயிகளை தியாகிகளாக மாற்றுவார்கள், போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் மரணங்களை இவர்கள் தங்கள் அரசியல் நலனுக்காக திருப்புவார்கள். பாஜக உத்தரபிரதேசத்தில் வெற்றிபெறக்கூடும், ஆனால் மோடி யூ-டர்ன் மாநிலத்தில் எதிர்க்கட்சிகளுக்கு வலிமையை கொடுத்துள்ளன.

அசாமில் வென்றது பாஜக
விவசாய சட்டங்களை ரத்து செய்தாலும் இல்லாவிட்டாலும், பஞ்சாப் ஒருபோதும் பிஜேபிக்கு கிடைக்கப்போவது இல்லை. விவசாயச் சட்டங்கள் இருந்தபோதிலும், இந்த ஆண்டு தொடக்கத்தில் அசாமில் பாஜக இரண்டாவது முறையாக வெற்றி பெற்றது. எனவே, சட்டங்கள் மற்றும் வாக்குகள், பொருளாதாரம் மற்றும் அரசியலுக்கு இடையே நேரடி தொடர்பு இல்லை.

பீஷ்மர் நிலையில் மோடி
ஐந்தாவது பிரச்சினை என்னவென்றால், மோடி யூ-டர்ன் செய்ததால், இனி மோடி மேற்கொள்ளும் ஒவ்வொரு சீர்திருத்தத்தையும் எதிர்ப்பதற்கு ஒரு கும்பல் துணியும். குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் வைத்து, தருமரிடம் பீஷ்மர் தன்னை எப்படி தோற்கடிக்க முடியும் என்ற ரகசியத்தை சொல்லிக் கொடுத்ததை போல, மோடி எதிர்கட்சிகளுக்கு, தன்னை வீழ்த்தும் திறவுகோலைக் கொடுத்திருக்கிறார்.
Recommended Video

சிஏஏ வாபஸ்?
தேர்தல் அரசியலுக்காக பெரும்பான்மை நலனை விட்டுக் கொடுக்க ரெடி என்பதை இநத் யு-டர்ன் மூலம் மோடி அவர்களிடம் சொல்லியிருக்கிறார். மோடி, வன்முறையாளர்களின் வெற்றியை உறுதிசெய்துள்ளார். பணக்காரர்களாக இல்லாத விவசாயிகளை மறுபடி இக்கட்டான நிலையில் விட்டு விட்டார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்பப் பெறவில்லை. அப்படி இருக்கும் போது விவசாய சட்டங்களில் ஏன் இந்த யூ-டர்ன்? இது CAA விஷயத்திலும் யூ-டர்ன் திரும்புவதற்கான முன்னோடியா? 2024ல் இந்தியா முடிவு செய்யும். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications