ஐபிஎல்லில் மோசடி.. அமித்ஷாவின் மகன் அறிவிக்கப்படாத சர்வாதிகாரி.. சுப்பிரமணியன் சுவாமியின் பரபரப்பு!
டெல்லி: பிசிசிஐயின் அறிவிக்கப்படாத சர்வாதிகாரி மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மகன் என பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் செய்துள்ளார்.
15 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி, மே 29ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை குஜராத் டைட்டன்ஸ் அணி வென்றது.
இந்த தொடரின் முடிவுகளில் மோசடி இருக்கலாம் என பாஜக சுப்பிரமணியன் சுவாமி ஒரு ட்விட்டர் பதிவை போட்டுள்ளார். இந்த தொடரின் முடிவுகள் வேண்டுமென்றே மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ட்விட்டரில் சு சாமி
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் டாடா ஐபிஎல் தொடரின் முடிவுகள் மோசடி செய்யப்பட்டதாக இருக்கலாம் என்ற எண்ணம் புலனாய்வு அமைப்பினரிடையே பரவலாக உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அமித்ஷாவின் மகன் பிசிசிஐயின் அறிவிக்கப்படாத சர்வாதிகாரியாக இருப்பதால் அதை அரசு செய்யாது. எனவே பொது நல வழக்கை தொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக உள்ளார். சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரிதான்
இதற்கு பலர் தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளார். சுப்பிரமணியன் சுவாமி கூறியது சரிதான். இது போட்டி நடைபெறுவதற்கு முன்பே மக்களுக்கு தெரியும். ஆனால் எதுவும் நடக்கவில்லை. நீதிமன்றமும் எந்த பொது நலன் வழக்குகளையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாது. உங்களால் கூட ஒன்றும் செய்ய முடியாது என்கிறார் இந்த வலைஞர்.

தவறு
நீங்கள் சொல்வது போல் இந்த ஐபிஎல் தொடர் முடிவுகளில் எந்த மோசடியும் நடந்ததாக எனக்கு தெரியவில்லை என்கிறார் இந்த நெட்டிசன்.

இப்படி கருத்து சொல்லாதீர்கள்
இது போன்ற உங்களது (சு சாமி) கருத்துகள் விளையாட்டு பிரிவில் ஆர்வம் காண்பிக்கும் இந்திய இளைய தலைமுறையினருக்கு மிகவும் மன சோர்வை ஏற்படுத்தும். இந்த கருத்தை சொன்னதற்கு மன்னிக்கவும் சார் என்கிறார் இந்த வலைஞர்.

முட்டாள்தனம்
அரசியல் ரீதியில் முட்டாள்தனமாக விமர்சனங்களை முன் வைப்பதற்கு முன்பு வெற்றி பெற்ற அணியினரின் உணர்வுகளை பற்றி நினைத்து பாருங்கள் என்கிறார் இந்த வலைஞர்.












Click it and Unblock the Notifications