ரயில் பயணிகளுக்கு சூப்பர் ஆப் வந்தாச்சு.. இனி எல்லாம் ஓரிடத்தில்.. ரூ.100 கோடியில் ரயில்வே "சம்பவம்"
டெல்லி: ரயில் டிக்கெட் முன்பதிவு, புறப்பாடு, வருகை, சேவை குறைபாடு குறித்த புகார்கள், முன்பதிவு இல்லாத டிக்கெட், நடைமேடை சீட்டு உட்பட ரயில்வே தொடர்பான அனைத்து தேவைகளையும் இனி ஒரே ஒரு செயலி மூலம் பயணிகள் பெற முடியும். அது என்ன செயலி? அதன் பயன்கள் என்னென்ன? சுருக்கமாக பார்ப்போம்.
நம்முடைய நாட்டில் ரயில் போக்குவரத்துக்கான தேவை என்பது அதிகரித்தபடியே உள்ளது.. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணம் செய்தும் வருகிறார்கள்.. பஸ்களை காட்டிலும், ரயில்களில் டிக்கெட் செலவு குறைவு, விரைவான மற்றும் பாதுகாப்பான பயணம் கிடைக்கும் என்பதால், பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்..

எனவேதான் பயணிகளின் வசதியையும், நன்மையையும் கருத்தில் கொண்டு, ரயில்வே நிறுவனம், ஏராளமான சலுகைகளையும், திட்டங்களையும், புதுபுது அறிவிப்புகளையும் வெளியிட்டவாறே உள்ளது. அந்தவகையில், ரயில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி தற்போது மீண்டும் வந்துள்ளது.
ரயில்வே சேவைகள்: அதாவது, ரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகள் ஒவ்வொரு சேவைக்காக, ஒவ்வொரு செயலிகளையும், இணையதளங்களையும் தனித்தனியாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இவை அனைத்துமே சேர்ந்து, ஒரே செயலியில் கிடைக்கும்படியான வசதியை ரயில்வே செய்து தர போகிறதாம்.
இதற்காக ரயில்வே சூப்பர் ஆப் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.. 100 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ள இந்த செயலியின் வருகையால் பயணம் தொடர்பான அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும். IRCTC இன் இந்த செயலியில், பயணிகள் ரயில் நிலை, டிக்கெட் முன்பதிவு மற்றும் பிடித்த உணவை ஒரே இடத்தில் ஆர்டர் செய்யும் வசதியை ரயில் பயணிகள் பெறுவார்கள்.
புதிய வசதிகள்: ஸ்வாரெயில் சூப்பர்ஆப்பை, ரயில்வே அறிமுகம் செய்துள்ளதாக, ரெயில்வே போக்குவரத்து செய்தி இணையதளமான ரெயில்வே சப்ளை தெரிவித்துள்ளது . இந்த புதிய ஆப் மூலம், டிக்கெட் முன்பதிவு, ரெயில் கண்காணிப்பு மற்றும் ரெயில்வே சேவைகளுக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தீர்வாகும், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் AI இயங்கும் அம்சங்களுடன் பயணிகளின் வசதியை மேம்படுத்துகிறது.
பயணிகளின் வசதியாக முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம், பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை பெறலாம்.. அத்துடன் சீசன் பாஸ்களை ஆப் மூலம் நிர்வகிக்கலாம். டூர் பேக்கேஜ் முன்பதிவு, ஓய்வு அறை, எக்சிகியூட்டிவ் லவுஞ்ச் வசதிகளும் இந்த புதிய ஆப்பில் உண்டு.
இந்த செயலி மூலம் நிகழ்நேர PNR நிலையைக் கண்காணிப்பது, இருக்கை கிடைப்பது சரிபார்ப்புகள் மற்றும் ரெயில்வே அட்டவணை விசாரணைகள் , ஓடுதல் நிலை, ரெயில் தேடல், பெட்டிகள் அமைப்பு உள்ளிட்ட பல சேவைகளை இந்த ஆப் வழங்கவுள்ளது.
இ-கேட்டரிங்: பயணச்சீட்டு, பார்சல் மற்றும் சரக்குக் கண்காணிப்பு, உணவு ஆர்டர்களுக்கான ஐஆர்சிடிசி இ-கேட்டரிங் மற்றும் குறைகளைத் தீர்ப்பதற்கான ரெயில் மடாட் போன்றவைகளையும் இந்த புதிய செயலி மூலம் பெற முடியும்.. இதன் மூலம் சேவைகளை ஒருங்கிணைத்து, ரெயில்வே தொடர்பான செயல்பாடுகளும் எளிதாகின்றன.. தரவு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான பரிவர்த்தனைகளை உறுதிசெய்தல், மொபைல் OTP உள்நுழைவை பயன்படுத்தி m-PIN, பயோமெட்ரிக் மற்றும் பல காரணி சரிபார்ப்பு ஆகியவற்றை செயல்படுத்துகிறது .
அதேபோல, ஒருங்கிணைந்த R-Wallet என்பது, ரயில் சேவைகளுக்கான கட்டணங்களை எளிதாக்குவதுடன், சிரமமில்லாத பரிவர்த்தனைகளையும் உறுதி செய்கிறது. தற்போது சோதனை கட்டத்தில் உள்ள இந்த செயலி, விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கும் வரப்போகிறதாம்.
வருவாய் பெருகும்: இதுகுறித்து ரயில்வே துறை மூத்த அதிகாரிகள் சொல்லும்போது, "ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு, IRCTC செயலி தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும். இப்போது உருவாக்கப்பட்டுள்ள சூப்பர் செயலி, IRCTC செயலியுடன் ஒருங்கிணைக்கப்படும்.
மேலும், ரயில்வே சேவைகளை வழங்கி வரும் பிற செயலிகளையும் இந்த சூப்பர் செயலியுடன் ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பயணியர் இன்னும் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் செயலி வடிவமைக்கப்பட உள்ளது. ரயில்வேக்கு கூடுதல் வருவாய் ஈட்டித்தரும் ஒரு தொழில்நுட்ப வசதியாகத் தான் இந்த சூப்பர் செயலியை நாங்கள் கருதுகிறோம்" என்கின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications