"இந்தியாவில் நகரங்களை விட கிராமங்களில் அதிகமாக உருவாகும் பெரும் பணக்காரர்கள்.." புது ஆய்வு முடிவுகள்
டெல்லி: இந்தியா சூப்பர் பணக்கார குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் குறிப்பாகக் கிராமப்புறங்களில் இருந்தே அதிக பணக்காரர்கள் வருவார்கள் என்று புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு குடும்பம் ஆண்டு 2 கோடி ரூபாய்க்கும் அதிக வருவாயைப் பெறுகிறதோ அது சூப்பர் பணக்காரக் குடும்பமாகக் கருதப்படும். இந்தியாவில் இந்த பெரும் பணக்காரர்கள் குறித்த ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டின் தரவுகளின் படி நாட்டில் இருக்கும் சூப்பர் பணக்காரர்களின் எண்ணிக்கை 18 லட்சமாக இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் இந்த சூப்பர் பணக்காரர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

கிராமங்களில் அதிகம்: பிபிள் ரிசர்ச் என்று அமைப்பு நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டிருந்தது. அதில் வரும் 2030இல் இந்தியாவில் இருக்கும் சூப்பர் பணக்காரர்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இத்தகைய சூப்பர் குடும்பங்களின் வளர்ச்சி நகர்ப்புறங்களைக் காட்டிலும் கிராமப் புறங்களிலேயே அதிகமாக உள்ளது. இது கிராமங்களில் 14.2% ஆகவும், நகரங்களில் 10.6% ஆகவும் உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் விரைவாக வளர்ந்து வரும் நிலையில், 2031ஆம் ஆண்டில் நாடு முழுக்க சுமார் 91 லட்சம் சூப்பர் பணக்காரர்கள் இருப்பார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த ரிப்போர்ட்டின் ஆசிரியர் ராஜேஷ் சுக்லா கூறுகையில், "கிராமங்களில் விவசாயம் மற்றும் விவசாயம் சாராத தொழிலில் மக்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்போது தொழில்முனைவோர் பலரும் கிராமங்களில் கவனம் செலுத்துகின்றனர். இதனால் அங்கே வேலைவாய்ப்பு அதிகரித்து பொருளாதாரம் வேகமாக வளர்க்கிறது" என்றார்.
பன்னாட்டு நிறுவனங்கள்: இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச நிதி ஆலோசகர்கள் வெளிநாட்டு வங்கிகளும் இந்தியாவில் தங்கள் சேவையை விரிவுபடுத்தி வருகிறது. 2018 முதல் 2022 வரையிலான ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் இந்தியா புதிதாக 70 கோடீஸ்வரர்களை உருவாக்கியதாக மதிப்பிடப்படுகிறது. இதன் காரணமாகப் பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியா மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.
மிடில் கிளாஸ் மக்கள் அதிகரிக்கும் நிலையில் ,ஆடம்பர கார்கள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா அதிகரிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் நாட்டின் பணக்காரர்களின் சொத்து மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. இது நாட்டின் வளர்ச்சித் திறனை அடிக்கோடிட்டுக் காட்டினாலும், நாட்டில் அதிகரித்து வரும் சமத்துவமின்மையையும் இது எடுத்துக்காட்டுகிறது.
மிடில் கிளாஸ்: நமது நாட்டில் ஆண்டுக்கு ரூ. 4 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை சம்பாதிக்கும் மிடில் கிளாஸ் மக்களின் எண்ணிக்கை 43 கோடியாக இருக்கிறது. இப்போது இந்தியாவில் இந்த மிடில் கிளாஸ் மக்களின் எண்ணிக்கையே வேகமாக அதிகரித்து வருகிறது. வரும் 2031இல் இந்தியாவில் உள்ள மிடில் கிளாஸ் மக்களின் எண்ணிக்கை 71.5 கோடியாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 1.25 லட்சத்திற்கும் குறைவாகச் சம்பாதிக்கும் மக்களின் எண்ணிக்கை அப்போது பாதியாகக் குறைந்து 7.9 கோடியாகச் சுருங்கிவிடும்.
நுகர்வு அடிப்படை வளர்ச்சி என்ற நிலைக்குச் செல்ல நீண்ட காலம் உள்ளதாகத் தெரிவித்த சுக்லா, நாம் இப்போது வேகமாக மிகப் பெரிய மிடில் கிளாஸ் மக்களைக் கொண்ட சமூகமாக மாறி வருவதாகத் தெரிவித்தார்..
-
கொடூரம்.! கரப்பான் பூச்சி கட்சி தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. வெளியான பகீர் வீடியோ -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications