போடு 'வெடிய'.. கன்பார்ம்டு போல.. பறந்து வந்த தகவல்.. சித்தராமையா ஆதரவாளர்கள் குஷியில் கொண்டாட்டம்
டெல்லி: கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் குறித்து இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது இதற்கு கட்சி மேலிடம் தீர்வு கண்டுள்ளது. இந்த ரேஸில் டி.கே.சிவகுமார் மற்றும் சித்தராமையா இருந்த நிலையில் சித்தராமையாவை முதலமைச்சராக நிறுத்த கட்சி தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்-பாஜக-மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் போட்டியிட்டிருந்தன. ஆனால் இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தது. எல்லாம் சரியாக போய்க்கொண்டிருந்தது என்று நினைத்தபோதுதான் அந்த 'சம்பவம்' நடந்தது. அதாவது 2019ம் ஆண்டு இந்த கூட்டணியிலிருந்த சுமார் 17 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவ ஆட்சி கவிழ்ந்தது. நாடாளுமன்ற தேர்தலில் தொடர் தோல்வியை தடவிய காங்கிரஸ் கஷ்டப்பட்டு பிடித்திருந்த ஆட்சி பாதியில் கலைந்ததால் கட்சி நிர்வாகிகள் தொடங்கி தலைமை வரை அனைவரும் வெக்ஸ்ஸாகினர்.

இந்த சமயத்தில் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்றவர்தான் டி.கே.சிவகுமார். இவர் இந்த பொறுப்புக்கு வந்த பின்னர் காங்கிரஸ் கட்சி ஓரளவு இந்த மனநிலையிலிருந்து மீண்டது. இதனையடுத்து இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 135 தொகுதிகளை கைப்பற்றி பாஜகவை பழிதீர்த்துக்கொண்டது. இந்த தேர்தல் வெற்றிக்கு டி.கே.சிவகுமாரின் பங்கு முக்கியமானதாகும். அதாவது வழக்கமாக ஒக்கலிகர் சமூகத்தினரின் வாக்குகள் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்குதான் செல்லும்.
ஆனால் இந்த சமூகத்தின் தலைவராக உள்ள சிவகுமார் இந்த வாக்குகளை சாதூர்யமாக காங்கிரஸ் கட்சிக்கு மடைமாற்றம் செய்திருக்கிறார். பழைய மைசூர் பகுதியில் நின்று காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றது இப்படிதான். ஆக டி.கே.சிவகுமாரை கட்சி மேலிடம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியாது. அதுமட்டுமல்லாமல் கட்சி கொடுத்த அத்தனை உத்தரவுகளையும் சிவகுமார் சரியாக நிறைவேற்றி வந்திருக்கிறார். எனவே இவருடைய கோரிக்கைக்கு கட்சி மேலிடம் செவி சாய்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

மறுபுறம் சித்தராமையாவும் இந்த முதலமைச்சர் ரேஸில் இருக்கிறார். இவர் சிவகுமாரை விட வயதிலும், அரசியலிலும் மூத்தவர். தற்போது வரை 9 முறை எம்எல்ஏவாக தேர்வாகி பணியாற்றியுள்ளார். 14 முறை சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார். மட்டுமல்லாது சித்தராமையா கர்நாடகம் முழுமைக்கும் அனைவருக்கும் பரிட்சயமானவராக இருக்கிறார். தலித், இஸ்லாமியர், குருபர் ஆகிய சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக செல்வாக்கை பெற்றவர் சித்தராமையா.
அகிந்தா என்ற அமைப்பை இதற்காகவே நடத்தியவர் சித்தராமையா. இந்த முறை இந்த ஓட்டுகள் மொத்தமாக காங்கிரசுக்கு வந்தன. மேலும் இவருக்கு பெரும்பான்மையான எம்எல்ஏக்களிடம் ஆதரவு இருக்கிறது. இந்த ஆதரவை வைத்துதான் அவர் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். ஆக இப்படியாக இரண்டு முக்கிய புள்ளிகளும் முதலமைச்சர் கோரிக்கையை வைத்திருப்பதால் யாரை முதலமைச்சராக தேர்வு செய்வது என்று தெரியாமல் கட்சி விழிபிதுங்கி நிற்கிறது.

முன்னதாக இது குறித்து இருவரையும் தனித்தனியே அழைத்து கட்சியின்
ஒருவேளை தனக்கு முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லையெனில் துணை முதலமைச்சர், நிதியமைச்சர் என எந்த பொறுப்பும் வேண்டாம் என்றும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மற்றும் ஒரு சாதாரண எம்எல்ஏவாகவும் இருந்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார். இதில்தான் சிக்கல் இருக்கிறது. ஒருவேளை இவருக்கு பதவி கொடுக்கவில்லையெனில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இவர் சார்த்த ஒக்கலிகர் சமூகத்தினர் ஓட்டு காங்கிரஸ் கட்சிக்கு கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.
ஒருவேளை தனக்கு முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லையெனில் துணை முதலமைச்சர், நிதியமைச்சர் என எந்த பொறுப்பும் வேண்டாம் என்றும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மற்றும் ஒது சாதாரண எம்எல்ஏவாகவும் இருந்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார். இதில்தான் சிக்கல் இருக்கிறது. ஒருவேளை இவருக்கு பதவி கொடுக்கவில்லையெனில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இவர் சார்த்த ஒக்கலிகர் சமூகத்தினர் ஓட்டு காங்கிரஸ் கட்சிக்கு கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.

ஆனால் இவரை முதலமைச்சராக்கிவிட்டால் இவர் மீது இருக்கும் சிபிஐ வழக்குகள் சூடுபிடித்து இவரை கைது செய்துவிட்டால் நாடாளுமன்ற தேர்தல் பயங்கர சொதப்பலாகிவிடும். எனவே இதையெல்லாம் யோசித்து சித்தராமையாவை முதலமைச்சராக்குவது என காங்கிரஸ் மேலிடம் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து சித்தராமையாவின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications