ஹிஜாப் தடைக்கு எதிரான அப்பீல் மனு - கர்நாடகா அரசுக்கு நோட்டீஸ்- செப்.5க்கு விசாரணை ஒத்திவைப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது கர்நாடகா அரசு பதிலளிக்க உத்தரவிட்டு செப்டம்பர் 5-ந் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ, மாணவிகள் சீருடை அணிந்து வர கல்லூரி நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. ஆனால் அந்த கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் சிலர் சீருடை மீது மத வழக்கப்படியான ஹிஜாப் அணிந்து வந்தனர். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. இத்தடைக்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து போராட்டம் நடத்தினர். இப் போராட்டத்துக்கு எதிராக அதே கல்லூரியில் படிக்கும் இந்து மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து வந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

கர்நாடகா அரசு தடை- ஹைகோர்ட் உத்தரவு

கர்நாடகா அரசு தடை- ஹைகோர்ட் உத்தரவு

இந்த சர்ச்சையைத் தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அம்மாநில அரசு கடந்த பிப்ரவரி மாதம் தடை விதித்தது. இந்த தடைக்கு எதிராக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், ஹிஜாப் இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமான வழக்கம் அல்ல. எனவே கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது.

 சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்

சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்

கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 6 முஸ்லிம் மாணவிகள் மேல்முறையீடு செய்தனர். இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மாணவிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் உச்சநீதிமன்றம் இதனை நிராகரித்துவிட்டது. இந்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருந்தது.

அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

இந்நிலையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் ஆஜராகி, ஹிஜாப் அப்பீல் மனு 4 மாதங்களாக நிலுவையில் இருக்கிறது. ஆகையால் உடனே விசாரிக்க வேண்டும். அல்லது ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்துவிட்டு பின்னர் இவ்வழக்கை விசாரிக்கலாம் என கோரிக்கை வைத்தார். ஆனால் இதனை தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா நிராகரித்தார்.

கர்நாடகா அரசுக்கு நோட்டீஸ்

கர்நாடகா அரசுக்கு நோட்டீஸ்

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று ஹிஜாப் வழக்கில் மாணவிகள் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, மேல்முறையீட்டு மனு மீது கர்நாடகா அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கின் விசாரணை செப்டம்பர் 5-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+