வேறு அதிகாரிகளே இல்லையா? எஸ்.கே. மிஸ்ரா இல்லாமல் அமலாக்கத் துறை செயல்படாதா? உச்சநீதிமன்றம் கேள்வி
டெல்லி: எஸ்.கே. மிஸ்ரா இல்லாமல் அமலாக்கத் துறை செயல்படாதா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அமலாக்கத் துறை இயக்குநராக உள்ள எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலம் வரும் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் அவருடைய பதவிக்காலத்தை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு விரும்பியது.
இதற்காக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் பிஆர் கவாய், விக்ரம் நாத், சஞ்சய் கரோல் ஆகியோர் அமர்வு எதற்காக ஒரு நபருக்காக மீண்டும் மீண்டும் பதவி நீட்டிப்பு கேட்டு வருகிறீர்கள்.

அமலாக்கத் துறையில் இயக்குநர் பதவிக்கு என ஒரு அதிகாரி கூட இல்லையா. இல்லை மற்ற அதிகாரிகள் அந்த பதவிக்கு திறமையற்றவர்களா. நீங்கள் கேட்கும் பதவி நீட்டிப்பை பார்த்தால் மற்ற அதிகாரிகள் திறமையானவர்கள் இல்லை என்பதை போன்று உள்ளது. ஒட்டுமொத்த அமலாக்கத் துறை அமைக்கும் மனச் சோர்வை ஏற்படுத்த முயற்சிக்கிறீர்கள். எஸ்.கே.மிஸ்ரா இல்லாமல் அமலாக்கத் துறை செயல்படாதா என கேள்வி எழுப்பினர்.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா கூறுகையில் அந்த பதவிக்கு யாரும் தகுதியானவர்கள் அல்ல என்பதல்ல. வரும் செப்டம்பர் மாதம் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) இந்தியாவுக்கு வருகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்றத்தை தடுக்கக் கூடிய, அதே நேரம் பயங்கரவாதிகளுக்கு நிதி செல்வதை கண்காணிக்கக் கூடிய கூட்டம் இதுவாகும்.
இந்த கூட்டம் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். அப்போது அமலாக்கத் துறை சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட கருத்து பரிமாற்றங்கள் முக்கியமானது. அதற்காகத்தான் மிஸ்ராவுக்கு பணிநீட்டிப்பு கேட்கிறோம் என்றார். இதனை ஏற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மிஸ்ராவுக்கு வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை அமலாக்கத் துறை இயக்குநராக நீடிக்கலாம் என தெரிவித்தனர்.
மேலும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு பிறகு எந்த காரணத்திற்காகவும் அவருக்கு பதவி நீட்டிப்பு கொடுக்க முடியாது. செப்டம்பர் 15 ஆம் தேதி நள்ளிரவு மிஸ்ராவின் பதவிக்காலம் நிறைவடைந்ததாக கருதப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் 3ஆவது முறையாக அமலாக்கத் துறை இயக்குநர் பொறுப்பை நீட்டித்தது சட்டவிரோதம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
1984 ஆம் ஆண்டு இந்திய வருவாய்த் துறை அதிகாரியான எஸ்.கே மிஸ்ரா, 2018 ஆம் ஆண்டு அமலாக்கத் துறை இயக்குநர் பதவியில் இருக்கிறார். முதலில் அவரது பதவிக்காலம் 2 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டது. அடுத்த 2021, 2022 ஆம் ஆண்டுகளில் ஓராண்டு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி ஜூலை 31 ஆம் தேதி அவருடைய பதவிக்காலம் முடிவடைகிறது. அதன்படி 3ஆவது முறை மிஸ்ராவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications