பெங்களூரில் முஸ்லீம்கள் அதிகமுள்ள ஏரியாவை பாகிஸ்தான் என்றழைத்த கர்நாடக ஐகோர்ட் நீதிபதி!
டெல்லி: கர்நாடக ஐகோர்ட்டில் சமீபத்தில் நடந்த விசாரணையின் போது நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா என்பவர், பெங்களூரில் முஸ்லீம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியைப் பாகிஸ்தான் எனக் குறிப்பிட்டார். மேலும், பெண் வழக்கறிஞரைப் பார்த்தும் சில சர்ச்சை கருத்துகளைக் கூறினார். இந்த வீடியோக்கள் இணையத்தில் பரவிய நிலையில், இது குறித்து கர்நாடக உயர்நீதிமன்றத்திடம் சுப்ரீம் கோர்ட் அறிக்கை கேட்டுள்ளது.
கர்நாடக ஐகோர்ட்டில் நீதிமன்ற விசாரணையின் போது அம்மாநில உயர் நீதிமன்ற நீதிபதி கூறிய சில கருத்துகள் இணையத்தில் பரவியது. இது பேசுபொருளான நிலையில், சுப்ரீம் கோர்ட் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்: இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் எஸ். கன்னா, பி. ஆர். கவாய், எஸ். காந்த் மற்றும் எச். ராய் ஆகிய 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு அதிருப்தி தெரிவித்தனர். நீதிபதிகள் நீதிமன்றத்தில் என்ன மாதிரியான கருத்துகளைக் கூறலாம் என்பது குறித்துத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டிய அவசியம் வந்துவிட்டதை இது காட்டுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்
நீதிமன்ற விசாரணைகளைக் கண்காணிப்பதில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், நீதிமன்றங்களில் கண்ணியத்துடன் விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றும் உச்ச நீதிமன்ற பெஞ்ச் கூறியது.
அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு: இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மேலும் கூறுகையில், "நீதிமன்ற விசாரணையின் போது கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்துகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வழிகாட்டுதல்களைக் கேட்டு கர்நாடக உயர்நீதிமன்றம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்" என்றனர்.
இரண்டு நாட்களில் இந்த ரிப்போர்ட்டை வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட நிலையில், வழக்கு விசாரணையைப் புதன்கிழமைக்குத் தள்ளி வைத்தனர். இந்த ரிப்போர்ட் அடிப்படையில், சில அடிப்படை வழிகாட்டுதல்களை வழங்கப்படலாம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
என்ன நடந்தது: கர்நாடக ஐகோர்ட் நீதிபதி ஸ்ரீஷானந்தா வழக்கு விசாணையின் போது கூறிய கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதன்படி ஒரு வீடியோவில் அவர் அவர் பெங்களூரில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியை "பாகிஸ்தான்" என்று குறிப்பிடுகிறார். அதேபோல மற்றொரு வீடியோவில் அவர் ஒரு பெண் வழக்கறிஞருக்கு எதிராக சில சர்ச்சை கருத்துகளைக் கூறுகிறார்.
அதாவது வழக்கு விசாரணையின் போது அந்த பெண் வழக்கறிஞர் ஏதோ சொல்ல வரவே.. அப்போது அந்த நீதிபதி, "அவரின் உள்ளாடைகளின் கலரை கூட சொல்லிவிடுவீர்கள் போலவே" என்று கூறியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications