சாலையில் போராடும் விவசாயிகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
டெல்லி: பிரச்சனைக்கு தீர்வு என்பது ஜனநாயக முறைப்படியும், நீதிமன்றம் மூலமுமாகவே இருக்க வேண்டும், நெடுஞ்சாலையை நிரந்தரமாக எப்படி அடைத்து வைக்க அனுமதிக்க முடியும்? என டெல்லி எல்லையில் சாலையை மறித்து போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது
டெல்லியின் எல்லையான நொய்டா பகுதிகளில் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக நெடுஞ்சாலைய மறித்து போராட்டம் நடத்தி வருவதால், போக்குவரத்து, ஆம்புலன்ஸ், அத்தியாவசிய பொருட்கள் கொண்டுவரும் வாகனங்கள் பாதிக்கப்படுகிறது, மேலும் மருத்துவ தேவைக்காக செல்லும்போதும், பணி நிமித்தமாக செல்லவும் கடும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
எனவே டெல்லி எல்லையில் நெடுஞ்சாலையை மறித்து போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த வேண்டும் எனகோரி நொய்டாவை சேர்ந்த மோனிக்கா அகர்வால் என்பவர் தொடரந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது

அரசு எடுத்த நடவடிக்கை என்ன
அப்போது நீதிபதிகள் போராடுவது அவர்கள் உரிமை, மேலும் பிரச்சனைக்கு தீர்வு என்பது ஜனநாயக முறைப்படியும், நீதிமன்றம் மூலமுமாகவே இருக்க வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் எப்படி நெடுஞ்சாலையை மறித்து, அடைத்து வைக்கலாம்? இது தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இது எப்போது முடிவுக்கு வரும் என வினவினர்.

விவசாய சங்க தலைவர்கள்
அப்போது மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், விவசாயிகளின் கருத்துக்களை அறிய குழு ஏற்படுத்தப்பட்டது, ஆனால் அதன் முன்பு வந்து பேச விவசாயிகள் வரவில்லை, தயாராக இல்லை. இந்த விவகாரத்தில் விவசாய தலைவர்கள் மீது நடவடிக்கை கோரி மனுதாரர் கூடுதல் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

சாலை மறியல்
அதற்கு நீதிபதிகள் விவசாயிகள் சாலையை மறித்து போராடுவது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
இந்த விவகாரத்தில் யாரை வழக்கில் சேர்த்தால் உதவ முடியும் என்பது தொடர்பாக விரிவான ஒரு புதிய மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கிறோம்.

சட்ட மீறலை தடுப்பது அரசு வேலை
மேலும் நீதிமன்றம் நிர்வாகம் சம்பந்தமாக விவகாரத்தில் உத்தரவிட்டால், உடனடியாக நீதிமன்றம் தன் அதிகார, விசாரணை வரம்பை மீறி தலையிடுகிறது என விமர்சனம் வைப்பீர்கள்.. எனவே இந்த போராட்ட விவகாரத்தல் சட்ட மீறல்கள் இருந்தால், மீறல்களை தடுக்க சட்டத்தை அமல்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் வேலை என்பதை மத்திய அரசுக்கு மீண்டும் நினைவூட்ட விரும்புகிறோம் என கூறிய நீதிபதிகள் வழக்கின் விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications