"தெருநாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க தடை..!" உச்ச நீதிமன்றம் மிக முக்கிய உத்தரவு!
டெல்லி: தெருநாய்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முக்கியமான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. அதாவது ஆக்ரோஷமாக இல்லாத நாய்களைக் கருத்தடை செய்து மீண்டும் பிடித்த இடத்திலேயே விட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தெருநாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்கத் தடை (Supreme Court Bans Feeding Stray Dogs in Public) விதித்துள்ள சுப்ரீம் கோர்ட், பிரத்தியேகமாக உணவளிக்கும் இடங்களை உடனடியாக உருவாக்க உள்ளூர் நிர்வாகங்களுக்கும் உத்தரவிட்டிருக்கிறது.
நாட்டில் நாய்க்கடி பிரச்சனை அதிகரித்து வருவதாகச் சொல்லித் தொடரப்பட்ட வழக்கில் சில வாரங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அதாவது டெல்லி என்சிஆர் பகுதியில் இருக்கும் நாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இதற்கு மிகக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், பலரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

உச்ச நீதிமன்றம்
இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.. அதில் அனைத்துத் தெருநாய்களைப் பிடித்து காப்பகத்தில் அடைக்கும் உத்தரவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது வெறித்தனமாக (aggressive) இருக்கும் நாய்கள் மற்றும் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய்களை மட்டும் காப்பகத்தில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
விடுவிக்க வேண்டும்
மற்ற நாய்களைப் பிடித்து கட்டாயமாகக் கருத்தடை செய்யவும் ரேபிஸ் தடுப்பூசி போடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டு, கருத்தடை செய்த பிறகு மற்ற நாய்களை எந்தத் தெருக்களிலிருந்து பிடிக்கப்படுகிறதோ, அங்கேயே விடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், முந்தைய உத்தரவில் டெல்லி என்சிஆர் பகுதியில் இருக்கும் நாய்களைப் பிடிக்க மட்டும் உத்தரவிடப்பட்டு இருந்த சூழலில், இப்போது இந்த உத்தரவை நாடு முழுக்க அமல்படுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பொது இடங்களில் உணவளிக்கக் கூடாது
மேலும், தெரு நாய்களுக்குப் பொது இடங்களில் உணவு அளிப்பதற்குக் கட்டுப்பாடுகள் விதித்தும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. என்ன காரணமாக இருந்தாலும் தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவு தரக்கூடாது எனச் சொல்லியிருக்கும் சுப்ரீம் கோர்ட், நாய்களுக்கு உணவளிக்கத் தனி இடங்களை உருவாக்க உள்ளூர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு நகராட்சி வார்டிலும் தெரு நாய்களுக்குத் தனி உணவு வழங்கும் இடங்களை உடனடியாக உருவாக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உணவு வழங்கும் இடங்கள், அந்த வார்டில் உள்ள தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
தனி இடங்களை உடனடியாக உருவாக்கணும்
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மேலும் கூறுகையில், "தெருநாய்களுக்கு உணவளிக்கத் தனியாக இடங்களை (Feeding areas) உருவாக்க வேண்டும். இந்த இடங்களில் மட்டுமே நாய்களுக்கு உணவளிக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்கும் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் தெருக்களில் நாய்களுக்கு உணவளிக்க அனுமதிக்கப்படாது. இந்த உத்தரவை மீறி நாய்களுக்கு உணவளிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
புகாரளிக்க ஹெல்ப் லைன்
முறையற்ற முறையில் தெரு நாய்களுக்கு உணவு அளிப்பதால் ஏற்படும் விரும்பத்தகாத சம்பவங்களைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மற்றும் சாலைகளில் நாய்களுக்கு உணவளிக்கும் பழக்கத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் தவிர்க்கப்படும். மேற்கண்ட வழிமுறைகளை மீறுவது குறித்துப் புகார் அளிக்க, ஒவ்வொரு நகராட்சியும் தனி ஹெல்ப்லைன் எண்ணை உருவாக்க வேண்டும். இத்தகைய புகார்கள் பெறப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகளைச் செயல்படுத்துவதில் எந்தவொரு தனிநபரோ அல்லது அமைப்போ தடையாக இருக்கக் கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.. நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த விடாமல் தடுக்கும் நபர்கள் மீது அரசுப் பணியைச் செய்ய விடாமல் தடுத்தாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications