சிவில் வழக்குகளை கிரிமினல் கேஸாக மாற்றுவதா? உச்ச நீதிமன்றத்திடம் வாங்கி கட்டிய உத்தரபிரதேச பாஜக அரசு
லக்னோ: கொடுக்கல் வாங்கல், நிலப்பிரச்சினை தொடர்பான சிவில் வழக்குகளை கிரிமினல் வழக்குகளாக பதிவு செய்ததற்கு உத்தர பிரதேச காவல் துறையை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. கடந்த 4 மாதங்களில் இரண்டாவது முறையாக இதுபோன்று நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு உள்ளாகியிருக்கிறது உத்தர பிரதேச பாஜக அரசு.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக கடிந்து கொண்டுள்ள உச்ச நீதிமன்றம், சிவில் வழக்குகளை எப்படி கிரிமினல் வழக்குகளா மாற்றலாம் எனக் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த 4 மாதத்தில் இதுபோல உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு உத்தர பிரதேச ஆசு உள்ளாவது இது 2-வது முறையாகும்.

கிரிமினல் குற்றமாகாது
கொடுக்கல் வாங்கல் தொடர்பான மோசடி வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், பணத்தை திருப்பி கொடுக்காத வழக்கு கிரிமினல் குற்றமாகாது எனத் தெரிவித்துள்ளது. மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவருக்கு எதிராக போலீசார் கிரிமினல் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதாவது:-
உத்தர பிரதேசத்தில் தினமும் நடக்கும் வினோதமான சம்பவமாக இது உள்ளது. பணம் கொடுத்து விட்டு அதை திருப்பி கொடுக்காமல் இருக்க கூடிய பிரச்சினை என்பது கிரிமினல் குற்றமாகாது. இது ஒரு வழக்கே இல்லை. இது சட்டத்தின் படி நடக்கும் ஆட்சியின் சீர்குலைவு ஆகும்" என்று காட்டமாக கூறியது. மேலும், விசாரணை அதிகாரியையும் கடிந்து கொண்ட உச்ச நீதிமன்றம், இதுபோன்ற நடவடிக்கை அபத்தமானது.
மறக்க முடியாத உத்தரவு பிறப்பிக்கப்படும்
சாட்சிக் கூண்டில் ஏற சொல்லிவிடுவேன் என காட்டமாக கூறியதோடு கீழமை நீதிமன்றத்தின் விசாரணைக்கு தடை விதித்தது. முன்னதாக கடந்த டிசம்பர் மாதமும் உத்தர பிரதேச காவல்துறைக்கு அறிவுறுத்தல் ஒன்றை விடுத்தது. அதாவது, சிவில் வழக்குகளை கிரிமினல் வழக்குகளாக தொடர்ந்து மாற்றும் நடவடிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு எதிரான துன்புறுத்தலை நிறுத்த வேண்டும் என்றும் கூறியது.
இந்த நடைமுறை நிறுத்தப்படாவிட்டால், தனது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவுக்கு ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டியிருக்கும் என்றும் கூறியது. நிலப்பிரச்சினை தொடர்பான வழக்கு ஒன்றை கிரிமினல் வழக்காக பதிவு செய்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு உத்தரபிரதேச காவல்துறையை கண்டித்து இருந்தது. இந்த நிலையில்தான் அடுத்த 4 மாதத்தில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது உத்தர பிரதேச காவல்துறை.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications