ஈரானிடம் அணு ஆயுதத்தை விட மோசமான புதிய ஆயுதம்.. அமெரிக்க உளவுத்துறை வார்னிங்!
வாஷிங்டன்: அமெரிக்காவுடன் போர் நிறுத்தம் செய்த பிறகு, "அணு ஆயுதத்தை விட மிகவும் சக்திவாய்ந்த ஒரு புதிய ஆயுதத்தை" ஈரான் பெற இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடு செய்து எச்சரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டாலும், உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் ஈரானின் இந்த திறன் இன்னும் அச்சுறுத்தலாகவே உள்ளது என உளவுத்துறை மதிப்பிட்டுள்ளதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக கூறி அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி அமெரிக்கா போர் தொடுத்தது. இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா, ஈரான் மீது வான்வழி தாக்குதலை தொடுத்தது. தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் பலத்த சேதம் அடைந்தது. ஈரானின் உச்ச தலைவர் அயேதுல்லா அலிகமேனியும் கொல்லப்பட்டார். ஈரானும் பதிலடியாக வளைகுடாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

அணு ஆயுதத்தை விட மிகவும் சக்திவாய்ந்தது
ஹார்முஸ் ஜலசந்தியையும் மூடுவதாக அறிவித்தது. ஈரானின் இந்த நடவடிக்கையில் சர்வதேச அளவில் எண்ணெய் சந்தைகள் ஆட்டம் கண்டன. போரை முடிக்க பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் பலனாக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் கையெழுத்தாக உள்ளது. ஒட்டுமொத்த உலகமும் இதனை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
மேற்கு ஆசியாவில் நடந்த மோதல்கள் மற்றும் அமெரிக்காவுடன் போர் நிறுத்தம் செய்த பிறகு, "அணு ஆயுதத்தை விட மிகவும் சக்திவாய்ந்த" ஒரு புதிய ஆயுதத்தை ஈரான் பெற இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடு செய்து எச்சரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் மிக முக்கியமான கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) ஈரான் எப்போது வேண்டுமானாலும் மூடிவிட முடியும் என்று அமெரிக்க உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டாலும், உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் ஈரானின் இந்த திறன் இன்னும் அச்சுறுத்தலாகவே உள்ளது என உளவுத்துறை மதிப்பிட்டுள்ளதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
சக்தி வாய்ந்த ஆயுதம்
இது குறித்து கூறப்பட்டு இருப்பதாவது:- வளைகுடா நாடுகளின் எரிசக்தி மையங்கள் மீது எப்படித் தாக்குதல் நடத்தலாம் என்பதை ஈரான் நன்கு கற்றுக் கொண்டுள்ளது. இது அமெரிக்காவின் பலவீனமான பகுதியாக மாறியுள்ளது என்று இந்த விவகாரத்தை நன்கு அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. "ஹார்முஸ் ஜலசந்தியின் முழுக் கட்டுப்பாட்டையும் நாம் ஈரானிடம் கொடுத்துவிட்டோம். இது எந்த அணு ஆயுதத்தை விடவும் சக்தி வாய்ந்த ஆயுதம்" என்றும் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா- ஈரான் இடையே எட்டப்பட்ட 14 அம்சங்களைக் கொண்ட ஒப்பந்தத்தின் ஆவணங்களில் சில தகவல்கள் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் படி, முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துகளை விடுவிக்கவும், 300 பில்லியன் டாலர் முதலீட்டை உள்ளடக்கிய ஈரானின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்கவும் அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு ஒப்பந்தம் குறித்த தகவலை ராய்ட்டர்ஸ் மற்றும் அல் அரேபியா வெளியிட்டுள்ளன. அதில், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை தயாரிக்காது என்று உறுதியளித்துள்ளதாகவும், அதற்கு பதிலாக பேச்சுவார்த்தைக் காலத்தில் ஈரானின் கச்சா எண்ணெய், பெட்ரோ கெமிக்கல் பொருட்கள் மற்றும் வங்கி சேவைகள் உள்ளிட்ட துறைகளின் மீதான தடைகளை அமெரிக்கா தளர்த்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வர
மேலும், இறுதி ஒப்பந்தம் எட்டப்பட்டதும் அனைத்து பொருளாதாரத் தடைகளையும் நீக்க அமெரிக்கா உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வருகிற ஜூன் 19 ஆம் தேதி Geneva நகரில் அமெரிக்கா மற்றும் ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்த வரைவில் "லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் நடைபெற்று வரும் போரை உடனடியாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இனி ஒருவருக்கு எதிராக ஒருவர் எந்தவித விரோத நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாட்டோம்" என்ற உறுதிமொழியும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
-
இஸ்ரேல் தேரை இழுத்து தெருவில் விட்டது.. லெபனான் மீது 84 முறை தாக்குதல்.. ஈரான் உச்சக்கட்ட கோபம்! -
14 பாயின்ட்.. மொத்த போரும் முடிவுக்கு வந்தது.. கதவை திறங்க, கப்பல் கிளம்பட்டும்! -
நெதன்யாகு சாயம் வெளுத்தது.. ஈரான் நினைத்தால் இஸ்ரேல் 2 மணிநேரத்தில் காலி.. டிரம்ப் பேச்சால் ஷாக்! -
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
பயிர் கடன் ரூ.75000 தள்ளுபடி விடுங்க! இப்படியொரு விஷயம் நடந்திருக்கு.. மொத்த விவசாய துறையும் ஹேப்பி! -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
இந்தியாவுக்கு சிக்கல் தொடரும்.. ஹார்முஸ் திறக்கப்பட்டாலும் கூட எல்லா பிரச்சனையும் உடனே தீராது! -
தோற்றது ஈரான் இல்லை! டிரம்ப் தான்.. ரூ.28 லட்சம் கோடியை தாரை வார்க்கும் அமெரிக்கா.. பின்னணி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை! -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு?













Click it and Unblock the Notifications