'நிதானமாக' பேசுங்க-முதல்வரை தரம் தாழ்த்தி பேசுவதா? அதிமுக சிவி சண்முகத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை ஒருமையில் தரம் தாழ்ந்து விமர்சித்ததால் தொடரப்பட்ட அவதூறு வழக்கை அதிமுக முன்னாள் அமைச்சரும் ராஜ்யசபா எம்பியுமான சிவி சண்முகம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுவாழ்வில் இருப்பவர்கள் நிதானமாக விமர்சனங்களை முன்வைக்க வேண்டும்; மாநில முதல்வரை ஒருமையில் தரம் தாழ்ந்து விமர்சிப்பது எப்படி சரியாகும்? எனவும் சிவி சண்முகத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்பியுமான சிவி சண்முகம், உங்களுடைய பணம், உங்களுடைய தாலியை அறுத்து, உங்கள் வீட்டில் இருக்கிற சாமான்களை அடமானம் வைத்து, டாஸ்மாக்கிலே குடித்து அந்த வருமானத்தில் மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய் இந்த ஸ்டாலினுக்கு கிடைக்கிறது என குறிப்பிட்டிருந்தார்.

aiadmk cv shanmugam supreme court

சிவி சண்முகத்தின் இந்த பேச்சு, முதலமைச்சரின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கூறி, சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி, சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி பி. வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சியின் ஜனநாயக கடமை தான் என்று போதும், அதில் கண்ணியம் தேவை என்று சுட்டிக்காட்டினார்.
மேலும் பேசும்போது எச்சரிக்கையுடன், கண்ணியத்துடன் பேச வேண்டும் என்றும் குறிப்பிட்ட அவர், தேர்தலின் போது வாக்குறுதிகளை கொடுப்பது உலக அளவில் உள்ள நடைமுறை தான் என்றும், வாக்குறுதிகளை நிறைவேற்றாதை சுட்டிக்காட்டலாம் என்றும் தெரிவித்தார். மனுதாரர் சி்.வி. சண்முகம் சாதாரண நபர் அல்ல, சட்டம் படித்தவர், முன்னாள் அமைச்சர். அவர் இவ்வாறு பேசக்கூடாது,
பொறுப்போடு பேச வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, அந்த காலம் போல் இப்போது இல்லை, அடுத்த தலைமுறையினர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், தலைமுறை மாறிவிட்டது, நாம் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை என குறிப்பிட்டார்.

இதையடுத்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் இதுபோல பேசுவது முதன்முறை அல்ல என்றும் மூன்று வழக்குகள் உள்ளதாகவும், அது சம்பந்தமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து அனைத்து வழக்குகளையும் சேர்த்து விசாரித்து உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி வேல்முருகன்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிவி சண்முகம் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பொதுவாழ்வில் இருப்பவர்கள் நிதானமாக பேச வேண்டும்; ஒரு மாநிலத்தின் முதல்வரை தரம் தாழ்ந்து, கண்ணியக் குறைவாக விமர்சிப்பது எப்படி சரியாகும்? ஆகையால் அவதூறு வழக்கை சிவி சண்முகம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+