தமிழ்நாடு அரசின் பெண்ணையாறு வழக்கு- நடுவர் மன்றம் எப்போ? மத்திய பாஜக அரசை விளாசிய உச்சநீதிமன்றம்!
டெல்லி: தமிழ்நாடு அரசு தொடர்ந்த பெண்ணையாறு வழக்கில் நடுவர் மன்றத்தை மத்திய பாஜக அரசு எப்போதுதான் அமைக்கும் என உச்சநீதிமன்றம் காட்டமாக கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் எத்தனையோ முறை அவகாசம் தந்தும் பெண்ணையாறு நடுவர் மன்றத்தை ஏன் மத்திய அரசு அமைக்கவில்லை என்பதும் உச்சநீதிமன்றத்தின் கேள்வி.
காவிரி நதிநீர் பிரச்சனை என்பது தமிழ்நாடு- கர்நாடகா இடையே ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தே நீடித்து வரும் விவகாரம். இந்த பிரச்சனையில் காவிரி நதிநீர் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனடிப்படையில்தான் காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையமும் அமைக்கப்பட்டது. இந்த ஆணையங்களின் உத்தரவுகளில் சிக்கல் எழுந்தால் உச்சநீதிமன்றத்தை நாடுவதும் நடைமுறையில் இருக்கிறது.

பெண்ணையாறு பிரச்சனை: இதேபோல தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே யர்கோல் என்னும் இடத்தில் அணை கட்டும் நடவடிக்கையை கர்நாடகா அரசு மேற்கொண்டது. இதற்கு எதிராக தென்பெண்ணை நதிநீர் தீர்ப்பாயம் அமைக்க வலியுறுத்தி 2019-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.
பெண்ணையாறு நடுவர் மன்றம்: இந்த வழக்கில் மத்திய அரசை அணுக வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனடிப்படையில் மத்திய அரசிடம் தென்பெண்ணை நடுவர் மன்றம் அமைக்க கோரியது தமிழ்நாடு அரசு. ஆனால் மத்திய அரசு இதனை கண்டுகொள்ளாத நிலையில் மீண்டும் உச்சநீதிமன்றம் போனது தமிழ்நாடு.
அவகாசம் கொடுத்த உச்சநீதிமன்றம்: இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் தென்பெண்ணை நதிநீர் தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
ஆனால் கர்நாடகா தேர்தல் நடைபெறுகிறது என்பதால் அவகாசம் கேட்டது மத்திய அரசு. இதனை ஏற்று உச்சநீதிமன்றமும் அவகாசம் தந்தது.
மத்திய பாஜக அரசுக்கு கண்டனம்: இந்நிலையில் இன்று பெண்ணையாறு வழக்கு விசாரணை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், பெண்ணையாறு பிரச்சனையில் கர்நாடகா அரசு பேச்சுவார்த்தை நடத்த தயார் என கடிதம் அனுப்பி இருக்கிறது என தெரிவிக்கப்பட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பெண்ணையாறு நடுவர் மன்றம் அமைக்க எத்தனையோ முறை அவகாசம் கொடுத்தும் ஏன் மத்திய அரசு அமைக்காமல் இழுத்தடித்து வருகிறது என கடும் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் இன்னும் ஒரு வார காலத்தில் மத்திய அரசு தமது நிலைப்பாட்டை பதில் மனுவாகத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications