Thug Life: “ஸ்டாண்ட் அப் காமெடியன் பேசுனா கூட புண்பட்டுருச்சுனு சொல்றீங்க”.. சுப்ரீம் கோர்ட் காட்டம்
டெல்லி: உணர்வை புண்படுத்தி விட்டதாக கூறுவதற்கு எல்லையில்லாமல் போய்விட்டது. ஸ்டாண்ட் அப் காமெடியன் ஏதாவது பேசினால் கூட, புண்படுத்தி விட்டதாக கூறி வன்முறையில் ஈடுபடுகிறீர்கள் என 'Thug Life' வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைஃப்' திரைப்படம் கடந்த 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற ப்ரொமோஷன் நிகழ்வுகளில் அந்தப் படத்தின் குழுவினர் கலந்து கொண்டனர். அந்த வகையில் பெங்களூரில் நடைபெற்ற நிகழ்வில் கமல் ஹாசன் பேசும்போது, தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது என கருத்தை தெரிவித்திருந்தார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கன்னட அமைப்பினர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால் மட்டுமே படத்தை கர்நாடகாவில் வெளியிடுவோம் என அறிவித்தனர். இவர்களுக்கு ஆதரவாக கர்நாடக அரசும் செயல்பட்டது. இதன் காரணமாக படத்தை கர்நாடகாவில் வெளியிட முடியாத நிலை உருவானது. இதனையடுத்து இந்த படத்தின் நடிகரும் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் 'தக் லைஃப்' வெளியீட்டிற்கு கர்நாடகாவில் பாதுகாப்பு வழங்கக் கோரி கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதி எம். நாகபிரசன்னா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது கன்னட மொழி தொடர்பாக கமல் கருத்து தெரிவித்துள்ளார் அவர் வரலாற்று ஆய்வாளரா? கன்னட மக்களின் மனம் புண்படுகிறது. கமல் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்டால் படத்தை ரீலிஸ் செய்வதற்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் கமல்ஹாசனைக் கடுமையாகக் கண்டித்த நீதிபதி, இன்றைய பதற்றமான நிலைக்கு நீங்களே காரணம். ஆனால் மன்னிப்பு கேட்காமல் அலட்சியம் காட்டுகிறீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். இதனையடுத்து கமல் விளக்கம் அளித்து கடிதம் அளித்த போதும் அதில் மன்னிப்பு என்ற வார்த்தை இல்லையே என நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்கள். இதனால் கர்நாடகாவில் தக்லைப் திரைப்படத்தை திரையிடவில்லை என கமல் அறிவித்தார்.
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் தக் லைஃப் படத்தை திரையிடும்போது பாதுகாப்பு வழங்கக் கோரி கர்நாடக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அப்போது இந்த வழக்கு விசாரணையின் போது, திரைப்படம் தடையில்லா சான்றிதழ் பெற்றிருந்தால் அதனை எந்த பிரச்னை இல்லாமல் திரையிடுவதற்காக பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும் கன்னட மொழி குறித்து கமலஹாசன் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோர வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட முடியாது. உயர்நீதிமன்றம் எப்படி கூறலாம்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கன்னட மொழிக்கு எதிராக கமல் பேசியிருந்தால் பெங்களூரைச் சேர்ந்த அறிவார்ந்த மக்கள் அவர் சொன்னது தவறு என எடுத்துக்கூற வேண்டும் என கூறிய உச்சநீதிமன்றம், தணிக்கை சான்றிதழ் பெற்ற எந்த படமாக இருந்தாலும் அது வெளியாவதை தடுக்க முடியாது என தெரிவித்திருந்தது.
இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, கர்நாடக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியானால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று பிரமாணப் பத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கமல் பேசியது அவதூறாக இருந்தால் அவதூறு வழக்குதான் தொடர்ந்திருக்க வேண்டும். உணர்வை புண்படுத்தி விட்டதாக கூறுவதற்கு எல்லையில்லாமல் போய்விட்டது. ஸ்டாண்ட் அப் காமெடியன் ஏதாவது கூறினால் கூட, புண்படுத்தி விட்டதாக கூறி வன்முறையில் ஈடுபடுகிறீர்கள் என கர்நாடக பிலிம் சேம்பருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், கர்நாடகாவில் 'தக் லைஃப்' திரைப்படம் திரையிடுவதற்கு யாரேனும் தடையாக இருந்தால் அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும். திரைப்படம் வெளியாகும்போது வன்முறைகள் ஏற்பட்டால் அதனை அரசு அடக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications