ஜம்மு காஷ்மீர் நியமன எம்எல்ஏக்கள் விவகாரம்-ஆளுநருக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் 5 நியமன எம்.எல்.ஏக்களை துணை நிலை ஆளுநர் நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பாக முதலில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்தையே மனுதாரர் நாட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீரில் புதிய கூட்டணி அரசு நாளை மறுநாள் பதவியேற்க உள்ளது. இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் கடந்த 5 ஆண்டுகளாக அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கான 5 நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்பதால் அதன் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவே 5 நியமன எம்.எல்.ஏக்களை நியமிக்கலாம் என்கிறது ஒருதரப்பு. இதன் மூலமாக பாஜகவை சேர்ந்த 5 பேரை நியமன எம்.எல்.ஏக்களாக துணை நிலை ஆளுநர் நியமிக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
ஆனால் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவோ, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைகிற போது துணை நிலை ஆளுநர் எப்படி நியமன எம்.எல்.ஏக்களை நியமிக்க முடியும்? மக்கள் அரசுதான் யார் நியமன எம்.எல்.ஏக்கள் என பரிந்துரைக்கும்; அதனையே துணை நிலை ஆளுநர் ஏற்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நியமன எம்.எல்.ஏக்களை துணை நிலை ஆளுநர் நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பிவி சஞ்சய் குமார் பெஞ்ச் இன்று விசாரித்தது. பொதுநலன் மனுத் தாக்கல் செய்த மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார்.
அப்போது, இந்த மனுவை முதலில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்ய வேண்டும்; ஆகையால் இம் மனுவை விசாரிக்க இயலாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) எண்ணிக்கை 90. 2019-ம் ஆண்டு சட்டப்படி 5 நியமன எம்.எல்.ஏக்கள் நியமிக்கப்படலாம். இடம் பெயர்ந்த காஷ்மீர் மக்கள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளைச் சேர்ந்த 5 பேர் நியமன எம்.எல்.ஏக்களாக நியமிக்கப்படலாம். இந்த 5 நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரம்தான் இப்போது சிக்கலாகி இருக்கிறது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications