பீகார் அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு மீதான தடையை நீக்க உச்சநீதிமன்றம் திட்டவட்ட மறுப்பு!
டெல்லி: ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மீதான பாட்னா உயர்நீதிமன்றத்தின் தடையை நீக்க வேண்டும் என்ற பீகார் அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பீகார் மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதனையடுத்து மாநில அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் என உத்தரவிட்டார் முதல்வர் நிதிஷ்குமார்.
ஆனால் பீகார் அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு உத்தரவுக்கு எதிராக பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பீகார் அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு உத்தரவுக்கு பாட்னா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. முன்னதாக உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. ஆனல உச்சநீதிமன்றம் தலையிட மறுத்து பாட்னா உயர்நீதிமன்றத்துக்கு திருப்பி அனுப்பியது.
பாட்னா உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக பீகார் அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இம்மனுவை உடனே விசாரிக்க வேண்டும் என பீகார் அரசு கேட்டுக் கொண்டது. இதனை ஏற்க மறுத்த பாட்னா நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜூலை 7-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதனிடையே பாட்னா உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீகார் அரசு மேல்முறையீடு செய்தது. இம்மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடரபான விளக்கங்களை பீகார் அரசிடம் நீதிபதிகள் கேட்டனர். பின்னர், பாட்னா உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு நிலுவையில் உள்ளது. ஆகையால் பாட்னா உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை நீக்க முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications