முஸ்லிம்களுக்கான 4% இடஒதுக்கீடு ரத்து.. அவகாசம் கேட்ட கர்நாடகா அரசு.. உச்சநீதிமன்றத்தில் ஒத்திவைப்பு
டெல்லி: கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி முஸ்லிம்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை பாஜக அரசு ரத்து செய்து பாஜகவின் ஓட்டு வங்கியான லிங்காயத் மற்றும் ஒக்கலிகர் சமுதாயத்துக்கு வழங்கியது. இதனை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் கூறிய நிலையில் பதிலளிக்க காலஅவகாசத்தை கர்நாடகா அரசு கேட்டதால் இன்றைய வழக்கு விசாரணை வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (மே) 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இதற்கிடையே தான் தேர்தல் நெருங்கிய நிலையில் லிங்காயத் சமுதாயத்தினர் தனி இடஒதுக்கீடு கேட்டனர். இந்த சமுதாயத்தினர் தான் பாஜகவின் ஓட்டு வங்கியாக கர்நாடகாவில் உள்ளனர்.

இதனால் ஆளும் பாஜக தரப்புக்கு சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு இருக்கும் இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து அதனை லிங்காயத் சமுதாயத்துக்கு வழங்க முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு முடிவு செய்தது.
அதன்படி கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 4 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த தனி இடஒதுக்கீட்டை மாநில அரசு சமீபத்தில் ரத்து செய்வதாக அறிவித்தது. அதோடு முஸ்லிம்களுக்கு பதிலாக லிங்காயத், ஒக்கலிகர் சமூகங்களுக்கு சமமாக 4 சதவீத இடஒதுக்கீட்டை பிரித்து வழங்குவதாக அறிவித்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது சமீபத்தில் விசாரணை நடத்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‛‛கர்நாடகத்தில் மாநில அரசு முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து அதை பிற சமூகங்களுக்கு வழங்கியுள்ளது. இது உச்சநீதிமன்றத்தில் முந்தைய வழங்கிய தீர்ப்புகளுக்கு எதிராக உள்ளது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது'' என வாதிடப்பட்டது.
கர்நாடக அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடினார். அப்போது ‛‛முஸ்லிம்களுக்கு மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. உண்மை ஆய்வு தகவல்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கவில்லை'' என்றார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் கர்நாடக அரசு முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த புதிய முடிவை வருகிற 18ம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து வழக்கு இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனுத்தாக்கல் செய்ய கர்நாடகா அரசு சார்பில் காலஅவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை ஏப்ரல் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications