Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் அரசியல்வாதி இல்லை.. ஆனா என்ன நடக்கும்னு நல்லா தெரியும்: ஓபிஎஸ் கோரிக்கைக்கு நீதிபதி சொன்ன பதில்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற நீதிபதி, லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் ஓபிஎஸ் தரப்பு வைத்த கோரிக்கையையும் நிராகரித்துள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நிர்வாகிகள் நீக்கம், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான தீர்மானங்களுக்கு தடை விதிக்கக் கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

Supreme court denied O Panneerselvam plea regard lok sabha election

இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு மீது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய விசாரணை மேற்கொண்டது. கடந்த டிசம்பர் 8ஆம் தேதி நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த அப்பீல் மனு மீதான விசாரணை மீண்டும் இன்று நடைபெற்றது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கே.கே.வேணுகோபால், குரு கிருஷ்ணகுமார், கோபால் சங்கரநாராயணன் ஆகியோர், கட்சி விதிகளின்படி நீக்கம் செய்யப்படவில்லை எனவும், ஒருங்கிணைப்பாளரை நீக்க அதிமுகவில் விதி எதுவும் இல்லை எனவும் வாதிடப்பட்டது. மேலும் பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

அப்போது நீதிபதிகள், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எப்படி தடை விதிக்க முடியும் என கேள்வி எழுப்பினர். மேலும், ஏற்கனவே விசாரணை நீதிமன்றத்தில் இந்த சிவில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தற்போது தலையிட்டால் அது மேலும் சிக்கலாகி விடும். எனவே, அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் நாங்கள் தலையிட முடியாது. அதிமுக பொதுக்குழு தொடர்பான மூல வழக்கை தொடர்ந்து நடத்தலாம் எனத் தெரிவித்தனர்.

அப்போது, நாடாளுமன்ற பொதுத்தேர்தல் விரைவில் வர இருப்பதால் அதிமுகவில் தற்போது யார் எந்த பொறுப்பு வகிப்பது என்று தங்களிடையே குழப்பம் நிலவி வருவதால் இடைக்கால உத்தரவு வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நீதிபதிகளிடம் வலியுறுத்தப்பட்டது.

அதற்கு, நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நான் அரசியல்வாதி இல்லை. ஆனால் இந்த விவகாரத்தில் என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியும். தற்போதைய சூழ்நிலையில் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதித்தால் அதிமுகவின் நிலை இன்னும் மோசமாகிவிடும். அதிமுகவில் பிளவு இருப்பது நன்றாக தெரிகிறது; அதற்கு கட்சியே தீர்வு காண வேண்டும் எனக் கூறி ஓபிஎஸ் தரப்பின் கோரிக்கையை நிராகரித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+