தன்பாலின திருமண விவகாரம்: மறு ஆய்வு கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
டெல்லி: தன்பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்தியாவில் தன்பாலின உறவு என்பது குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. இருப்பினும் தன்பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடையாது. பல மேலை நாடுகளில் தன்பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அனுமதி கொடுக்கப்பட்டுள்ள போதிலும் இந்தியாவில் இதுவரை ஓரின திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில், ஓரின திருமண ஜோடியினர் தாங்கள் செய்துகொண்ட திருமணத்தை, சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அனுமதிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தாரர் தரப்பில் வைத்த வாதத்தில், ‛‛இந்தியாவில் ஓரின திருமணத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்.
தற்போது அனுமதி இல்லாததால் தாங்கள் திருமணம் செய்து கொள்ள முடியாத சூழல் உள்ளது. மேலும் அரசியலமைப்பு சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளும் கிடைக்காத நிலையில் உள்ளது'' என்று வாதிட்டனர். ஆனால் மத்திய அரசு தரப்பில் வைத்த வாதத்தில், ‛‛இந்தியாவில் ஓரின திருமணத்தை அனுமதிக்க கூடாது. இது இந்திய கலாசாரத்திற்கு எதிரானது'' என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், 3:2 என்ற அடிப்படையில் தீர்ப்பளித்தது. இதன்படி, தன்பாலின திருமணங்களுக்கான சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என்பதே தீர்ப்பாக இருந்ததது. "இதுபோன்ற திருமணங்களை தன்பாலின ஈர்ப்பு உள்ளவர்களும் மற்றவர்களை போல் மதிக்கப்பட வேண்டும் என்பதுதான் தங்களது நோக்கம். மேலும் அவர்களது திருமணத்தை அங்கீகரிக்க முடியாது.
திருமண சட்டங்களை வடிவமைப்பது நாடாளுமன்ற, சட்டமன்றங்களின் முடிவு. அதில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்று தீர்ப்பளித்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி, மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், வெளிப்படையாக எந்த பிழையும் அந்த தீர்ப்பில் இல்லை. எனவே அதில் தலையிடுவது தேவையற்றது எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications