டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிகாலை 2.30 மணி.. 'மைனர்'.. பள்ளி சான்றிதழை பாருங்க.. உச்ச நீதிமன்றத்தில் அப்போது என்ன நடந்தது

Google Oneindia Tamil News

டெல்லி: நிர்பயா வழக்கில் தூக்கிலடப்பட்ட 4பேரும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்ற அதிகாலை மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

Recommended Video

    திகார் சிறையில் நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

    பவன் குப்தா, தனக்கு குற்றம் நடந்த சம்பவத்தில் 18 வயது ஆகவில்லை என்ற வாதிட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இறுதிவரை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.

    தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை கோரிய நிர்பயா குற்றவாளிகளின் மனு நேற்று நள்ளிரவு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கடைசி முயற்சியாக உச்ச நீதிமன்றத்தில் இன்று அதிகாலை முறையீடு செய்தனர்.

    உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

    உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

    குற்றவாளிகள் சார்பில் ஏபி சிங் மனு தாக்கல் செய்தார். 4 குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தாவின் கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர் ஏபி சிங் நள்ளிரவில் உச்ச நீதிமன்ற பதிவாளரின் வீட்டுக்கு சென்று மனு தாக்கல் செய்தார். இதையடுத்து வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. பவன் குப்தாவின் மனுவை உச்ச நீதிமன்றம் அதிகாலை 2.40 மணிக்கு விசாரிக்க தொடங்கியது. குற்றவாளிகள் தரப்பில் ஏபி சிங் ஆஜராகி வாதாடினார். மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா ஆஜரானார்.

    பள்ளி சான்றிதழை பாருங்க

    பள்ளி சான்றிதழை பாருங்க

    நிர்பயா குற்றவாளிளுக்கு 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில் விசாரணை தொடங்கியது. குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா குற்றம் நடந்த சமயத்தில் 18 வயது நிறைவடையாதவர் என ஏபி சிங் வாதிட்டார். பள்ளி சான்றிதழ், வருகை பதிவேடுகளை நீதிமன்றத்தில் காட்டி வாதிட்டார். அப்போது நீதிபதி பூஷண் இந்த சான்றிதழ் எல்லாம் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டவை தான். கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக எந்த அடிப்படையில் வழக்கு தொடர்ந்து உள்ளீர்கள். நீங்கள் இப்போது வைக்கும் வாதம் எல்லாம் ஏற்கனவே வாதிடப்பட்டவை தான் என்று வாதத்தை ஏற்க மறுத்தார்.

    பவன் விருப்பம்

    பவன் விருப்பம்

    இதையடுத்து வழக்கறிஞர் ஏபி சிங் குறைக பட்சம் இரண்டு மூன்று நாள் தண்டனை நிறைவேற்றத்தை தள்ளி போட வேண்டும் என பவன்( குற்றவாளி) விரும்புகிறார் என்றார். இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் பவனின் கருணை மனு நிராகரிப்பு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவது உறுதியானது.

    அனுமதி மறுப்பு

    அனுமதி மறுப்பு

    கடைசியாக குற்றவாளிகளை பார்க்க அவரது குடும்பத்தினரை அனுமதிக்க கோரி ஏபி சிங் கேட்டார். அதை அனுமதிக்கலாம் என மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தி கூறினார். ஆனால் மிகுந்த வலியான விஷயம் . அத்துடன் அப்படி ஒரு வழக்கம் இல்லை என திகார் சிறை நிர்வாக ம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து அந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. இதன்பின்னர் சொன்னபடி குற்றவாளிகள் 4 பேரையும் அதிகாலை 5.30 மணி அளவில் தூக்கிலட்டனர். 4 பேரின் அத்தியாயமும் முடிந்தது.

    English summary
    2012 Delhi gang-rape case: Supreme Court dismisses the petition of death row convict Pawan Gupta against rejection of his mercy plea by the President and seeking stay on execution
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X