Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடிக்கு எதிராக போட்டி.. வாரணாசியில் அய்யாக்கண்ணுவுக்கு என்ன வேலை? உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை நீட்டிக்க கோரி அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில், வேட்பு மனு தாக்கல் செய்யும் அவகாசத்தை நீட்டிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

Supreme Court dismisses the case filed by farmer leader Ayyakannu

வாரணாசியில் ஏன் போட்டியிட விரும்புகிறீர்கள்? என அய்யாக்கண்ணுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். "வாரணாசியில் ஏன் போட்டியிட விரும்புகிறீர்கள்? தமிழகத்தில் ஏன் போட்டியிடவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த அய்யாக்கண்ணுவுக்கு வாரணாசியில் என்ன வேலை? அங்கு யார் உங்களுக்கு வாக்களிப்பார்கள்? சமூக சேவகர் என்றால் தமிழ்நாட்டில் போட்டியிடுங்கள். விளம்பரத்துக்காக இதுபோன்று மனு தாக்கல் செய்யாதீர்கள்" என்று தெரிவித்தனர்.

அப்போது அய்யாக்கண்ணு தரப்பு வழக்கறிஞர், விளம்பர நோக்கத்திற்காக வழக்கு தொடரவில்லை. விவசாயிகளுக்காகவே போராடி வருகிறோம். இணையதளம் வாயிலாக வேட்பு மனு தாக்கல் செய்ய வசதி செய்யப்படவில்லை என்று வாதிட்டார். எனினும், அய்யாக்கண்ணு தாக்கல் செய்த ரிட் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் விவசாயி அய்யாக்கண்ணு, பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாராணசி தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்தார். வேட்புமனு தாக்கல் செய்ய வாராணசி செல்ல அண்மையில் கன்னியாகுமரி - பனாரஸ் விரைவு ரயிலில் முன்பதிவு செய்திருந்தார். அவருடன் 120க்கும் மேற்பட்ட விவசாயிகளும் முன்பதிவு செய்திருந்தனர்.

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் மே 10ஆம் தேதி காலை அவர்கள் அனைவரும் ரயிலில் ஏறி உள்ளனர். அனைவரும் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நிலையில், திடீரென அவர்களது டிக்கெட் ரத்து செய்யப்பட்டு விட்டதாகக் கூறி தஞ்சாவூரில் அவர்கள் போராட்டம் நடத்தினர். ரயில்வே துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதனிடையே தங்களுக்கு இருக்கைகள் அமைத்து தரக் கோரி விழுப்புரத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயி ஒருவர் ரயிலில் இருந்த அபாய சங்கிலியை இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்ட ரயில், செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு வந்த போது இருக்கைகளை ஏற்படுத்தி தரவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அங்கு ரயிலை மறித்து அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம், ரயில்வே போலீஸார் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் நடைபெற்று வந்ததால் ரயிலில் பயணித்த சக பயணிகள் அதிருப்தி அடைந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் அந்த ரயிலில் இருந்து இறங்கினர்.

பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த தங்களை ரயில் நிலையத்தில் தடுத்து போலீசார் கைது செய்தனர் என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்ய வர முடியவில்லை எனவே, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் எனக் கோரி அய்யாக்கண்ணு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அய்யாக்கண்ணு தனது மனுவில் கூறியிருந்த காரணத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+