Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

471 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வரும் செந்தில் பாலாஜி.. வழக்கு கடந்து வந்த பாதை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 471 நாட்களாக சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம், ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் செந்தில் பாலாஜி. இந்த வழக்கில் கடுமையான வாதங்கள் நடந்த நிலையில் இன்று ஜாமீன் வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது உச்ச நீதிமன்ற அமர்வு.

செந்தில் பாலாஜி கைது: அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சட்ட விரோதமாக பணம் பெற்ற வழக்கில் திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். 471 நாட்களாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு இன்று உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி வழக்கு கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்.

senthil balaji supreme court enforcement directorate

2014 ஆம் வருடம்: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலிதாவின் அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக வலம் வந்த செந்தில் பாலாஜி கடந்த 2014 ஆம் ஆண்டு, போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர் நடத்துநர் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் சிக்கினார்.

2015 ஆம் வருடம்: கடந்த 2015 ஆம் ஆண்டு தேவசகாயம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதில் செந்தில் பாலாஜி பெயர் இடம்பெறவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் உள்பட 40 பேர் மீது 2016 ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

2016 ஆம் வருடம்: பண மோசடி தொடர்பாக செந்தில் பாலாஜி மீது கடந்த 2016 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.

2018 ஆம் வருடம்: மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், இருதரப்பிலும் சமரசம் ஏற்பட்டுவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. இதை எதிர்த்து போலீஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சமரசம் ஏற்பட்டதால் பணம் கைமாறியது உறுதியாகிறது என்றும் இதனால் மீண்டும் விசாரணை நடத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

2019 ஆம் வருடம்: இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி செந்தில் பாலாஜிக்கு கடந்த 2019ல் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அமலாக்கத்துறையால் அனுப்பிய இந்த சம்மன் சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.

2021: கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி வெற்றி பெற்று திமுக அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

2022: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரி கார்த்திக் தசாரி மேல் முறையீடு செய்தார். தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி செந்தில் பாலாஜி கடந்த 2022- ல் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

2023 மே மாதம்: கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதி இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை இரண்டு மாதத்திற்குள் விசாரணை முடிக்கும்படி குற்ற பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது.

2023 ஜூன் 13: சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி நாள் முழுவதும் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வீட்டிலிருந்த செந்தில் பாலாஜி எங்கும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

2023 ஜூன் 14: ஜூன் 14ஆம் தேதி அதிகாலை செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டதும், செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் அப்போதே சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் செந்தில் பாலாஜி.

2023 ஜூன் 21: நெஞ்சு வலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. சிறையில் இருந்தபடியே அவ்வப்போது மருத்துவ சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு சென்னை அமரவு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

2023 ஜூலை 4: செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் சட்ட விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது.

2023 ஜூலை 14: இந்த வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன், மேகலாவின் மனுவை தள்ளுபடி செய்தார். இதையடுத்து புழல் சிறையில் செந்தில்பாலாஜி அடைக்கப்பட்டார். இலாகா இல்லாத அமைச்சராகவும் தொடர்ந்து வந்தார். செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கியதாக ஆளுநர் ரவி தெரிவித்த நிலையில், பின்னர் அதனை திரும்பப் பெற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அவரது சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால் கூறி ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. செந்தில்பாலாஜி ஜாமின் கேட்டு தொடர்ச்சியாக தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தன.

2024 பிப்ரவரி: செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை நீதிமன்றம் உத்தரவிட்டதற்குப் பிறகு ராஜினாமா செய்தார். சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், சமூகத்தில் அதிகாரம் படைத்தவராக இருப்பதால் ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்தது.

2024 மார்ச் 18: நீண்டகாலமாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் செந்தில் பாலாஜி தரப்பு- அமலாக்கத் துறை தரப்பு என இருதரப்பினருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

2024 ஆகஸ்ட் 12: மனுதாரர் 13 மாதங்களாக சிறையில் இருக்கிறார். தற்போது வரை இந்த வழக்கில் விசாரணை தொடங்கவில்லை. விசாரணை எப்போது தொடங்கும் என்பதும் தெரியவில்லை என செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது.

2024 செப்டம்பர் 26: இந்நிலையில் இன்று ஜாமீன் மனு மீதான தீர்ப்பை வழங்கி உள்ளது உச்சநீதிமன்றம். இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கி உள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம். இதன் மூலம் 471 நாட்களாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி வெளியே வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+