குஜராத்துக்கு தனி சட்டமா? உள்ளே போய்ருவீங்க.. நீதிபதி, போலீசாரை லெஃப்ட் ரைட் வாங்கிய உச்சநீதிமன்றம்!
டெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவை மீறி தொழிலதிபரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்த குஜராத் நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத காவலில் வைத்த மாஜிஸ்திரேட்டும், விசாரணை அதிகாரிகளும் 4 நாள் உள்ளே இருக்கட்டும் என நீதிபதிகள் காட்டமாக தெரிவித்துள்ளனர்.
குஜராத் மாநிலம் சூரத் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட், தொழிலதிபர் துஷார்பாய் ரஜினிகாந்த்பாய் ஷா என்பவரை போலீஸ் காவலுக்கு அனுப்பி உச்சநீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தொழிலதிபர் துஷார்பாய் ரஜ்னிகாந்த் பாய்ஷாவை போலீஸ் காவலுக்கு அனுப்பிய மாஜிஸ்திரேட்டுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. குஜராத் மாநில உள்துறை கூடுதல் தலைமை செயலருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

மோசடி வழக்கில் குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த துஷார்பாய் ரஜினிகாந்த்பாய் ஷா என்ற தொழிலபதிபருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால முன்ஜாமீன் வழங்கியது. கடந்த டிசம்பர் 8ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால முன்ஜாமீன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டபோதிலும், தொழிலதிபர், போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரிடம் இருந்து போலீசார் ரூ.1.65 கோடி பணம் கேட்டு மிரட்டியதாகவும், அவரது வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தொழிலதிபர் துஷார்பாய் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் வகையில் குஜராத் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததாக சுட்டிக்காட்டினர். உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி டிசம்பர் 12 முதல் டிசம்பர் 16 வரை நான்கு நாட்களுக்கு போலீஸ் காவலில் வைக்கப்பட்டதாகவும், மிரட்டப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இதனால் கோபமடைந்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பெஞ்ச், குஜராத் பல்வேறு சட்டங்களைப் பின்பற்றுவது போல் தெரிகிறது, இது உத்தரவுகளை முற்றிலும் மீறும் வகையில் உள்ளதாகவும், மோசமான நீதிமன்ற அவமதிப்பு என்றும் கூறியது. உச்ச நீதிமன்ற உத்தரவை இப்படித்தான் கையாள்கிறார்களா என கோபமாக கேள்வி எழுப்பினர். மேலும், உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கிய பிறகு ரிமாண்ட் உத்தரவு பிறப்பித்தது எப்படி, என விளக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
மனுதாரர் துஷார்பாயின் வழக்கறிஞர், அவருக்கு போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது அனைத்தும் காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளதாகக் கூறினார். இதையடுத்து, சிசிடிவி காட்சிகளை நீதிபதிகள் கேட்டனர். அதற்கு குஜராத் அரசு தரப்பில், சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், "இது எதிர்பார்க்கப்பட்டது தான். இது வேண்டுமென்றே நடத்தப்பட்டுள்ளது. சூரத் நாட்டின் மிகப்பெரிய வணிக மையமாக உள்ளது. ஆனால், அங்கு மட்டும் அந்த நான்கு நாட்களாக கேமராக்கள் வேலை செய்யாமல் இருந்திருக்கும். காவல் நிலைய நாட்குறிப்பில் துஷார் பாய் இருப்பை போலீசார் குறிக்காமல் விட்டிருப்பார்கள். இது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம்." என கடுமையாகச் சாடினர்.
மேலும், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி, ரிமாண்ட் உத்தரவு பிறப்பித்த மாஜிஸ்திரேட்டிற்கும் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று கூறிய நீதிபதிகள், குஜராத் அரசு தரப்பு வழக்கறிஞரிடம், அனைவரையும் ஜனவரி 29ஆம் தேதி மூட்டை முடிச்சுகளுடன் வரச் சொல்லுங்கள், ஜனவரி 29ஆம் தேதி இந்த விஷயத்தை நீதிமன்றம் முடிவு செய்யும் எனக் காட்டமாகத் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் விசாரணை அதிகாரி தவறு செய்துவிட்டதாக ஒப்புக்கொண்ட குஜராத் மாநில அரசு வழக்கறிஞர், நீதிபதிகளிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். ஆனால், தொழிலதிபர் துஷார்பாய் நான்கு நாட்கள் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்ட நீதிபதிகள், மாஜிஸ்திரேட் மற்றும் விசாரணை அதிகாரி நான்கு நாட்களுக்கு உள்ளே இருக்கட்டும் என்று கோபமாகத் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கிய வழக்கில், ரிமாண்ட் கோரி மனு தாக்கல் செய்ததே முதலில் அவமதிப்பு. அப்படி இருக்கும்போது, ரிமாண்ட் வழங்கப்பட்டு அப்பட்டமான சட்டவிரோத காவலில் நான்கு நாட்கள் வைத்துள்ளீர்கள். ஜனவரி 29ஆம் தேதி அனைவரும் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் சபர்மதி சிறைக்கு அனுப்புவோம் எனத் தெரிவித்து, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், சூரத் போலீஸ் கமிஷனர், துணை போலீஸ் கமிஷனர், வெசு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications