பிஆர்எஸ் கவிதாவுக்கு ஏமாற்றம்! ஜாமீன் வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும் அம்மாநில எம்.எல்.சியுமான கவிதாவின் ஜாமீன் மனு மீதான வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மணீஷ் சிசோடியாவை தொடர்ந்து ஜாமீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த கவிதாவுக்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவு ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் மதுபான கொள்கை பெரும் சர்ச்சையானதால் அது திரும்பப் பெறப்பட்டது. இந்த மதுபான கொள்கை அறிவிப்பில் பெரும் முறைகேடு நிகழ்ந்திருப்பதாகவும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கையால் ஆதாயம் அடையும் நிறுவனத்துக்கும் கவிதாவுக்கும் தொடர்பிருப்பதால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் கவிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்களை நீதிமன்றங்கள் நிராகரித்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதனிடையே அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் இருந்து டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 17 மாத சிறைவாசத்துக்குப் பின்னர் நிபந்தனைகளுடன் மணீஷ் சிசோடியா ஜாமீனில் விடுதலையானார்.
இதனால் இதே வழக்கில் சிறையில் இருக்கும் கவிதாவுக்கும் உச்சநீதிமன்றம் நாளை ஜாமீன் வழங்கக்க் கூடும் என்பது எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த நிலையில் இன்றைய வழக்கு விசாரணையின் போது, கவிதாவின் ஜாமீன் மனு மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தரப்பில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கவிதா தரப்புக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது.
-
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்? -
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications