ஆதார் கார்டு vs பிறந்த தேதி.. இன்சூரன்ஸ் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சம் என்ன?
டெல்லி: மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு தீர்ப்பாயத்தில் அரியானாவைச் சேர்ந்தவரின் குடும்பத்திற்கு பள்ளி சான்றிதழ் அடிப்படையில் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் காப்பீடு நிறுவனம் ஆதார் அடிப்படையில் வயதை கணக்கிட்டு இழப்பீட்டை பாதியாக குறைத்தது. இதை எதிர்த்து தொடரப்பபட்ட வழக்கில் ஒருவரின் வயதை தீர்மானிக்க ஆதார் அட்டை முறையான ஆவணம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. பள்ளி சான்றிதழ்படி தான் வயதை தீர்மானிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
பள்ளி சான்றிதழில் ஒரு வயதும், ஆதார் கார்டில் ஒரு வயதும், ரேஷன் கார்டில் ஒரு வயதும், வாக்காளர் அடையாள அட்டையில் ஒரு வயதும் பலருக்கும் இருக்கிறது.. இதில் பள்ளி சான்றிதழ் அடிப்படையில் தான் வயதை தீர்மானிக்கிறார்கள். எனினும் பள்ளி சான்றிதழ் இல்லாதவர்கள் அவர்களாக ஒரு வயதை சொல்லி, அதுதான் தனது வயது என்று கூறியிருக்கிறார்கள்.

60களில், 70களில், 80களில் பிறந்தவர்களுக்கு இதுதான் அவர்களது வயது என்பதை நிரூபிக்க மக்களிடம் போதிய ஆவணங்கள் இல்லை.. ஏன் அரசாங்கத்திடமே போதிய ஆதாரங்கள் இல்லை.. படித்திருந்தால் அதில் வயது குறிப்பிட்டிருக்கும். அது உண்மையோ பொய்யோ, அது தான் அவர்களது வயதாகும். இதுதான் இப்போது வரை நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் பள்ளி சான்றிதழில் ஒரு வயதும், ஆதார் கார்டில் ஒரு வயதும், ரேஷன் கார்டில் ஒரு வயதும், வாக்காளர் அடையாள அட்டையில் ஒரு வயது இருந்தாலும், பள்ளி சான்றிதழ் வயது தான் இறுதியானது என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு, அரியானா மாநிலம் ரோதக்கை சேர்ந்த ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு இழப்பீடு கோரி, அரியானா மாநிலம் ரோதக்கில் உள்ள மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு தீர்ப்பாயத்தில் அவருடைய குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.
பள்ளி சான்றிதழ் அடிப்படையில், இறந்தவரின் வயது 45 என்று கணக்கிட்ட தீர்ப்பாயம், அவருடைய குடும்பத்துக்கு ரூ.19 லட்சத்து 35 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. அதை எதிர்த்து பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்றத்தில் காப்பீட்டு நிறுவனம் மேல்முறையீடு செய்தது. ஆதார் அட்டை அடிப்படையில் கணக்கிட்டால், இறந்தவரின் வயது 47 என்று கூறிய உயர்நீதிமன்றம் இழப்பீட்டு தொகையை ரூ.9 லட்சத்து 22 ஆயிரமாக குறைத்துவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, இறந்த நபரின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். பள்ளி சான்றிதழ் அடிப்படையில், இறந்தவரின் வயது 45 தான் என்று அவர்கள் கூறினர். இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சய் கரோல், உஜ்ஜால் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்து நேற்று தீர்ப்பு அளித்தனர்.
நீதிபதிகள் சஞ்சய் கரோல், உஜ்ஜால் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பில் கூறுகையில், 2015-ம் ஆண்டின், சிறார் நீதி சட்டத்தின் 94-வது பிரிவின்படி, பள்ளி சான்றிதழில் குறிப்பிட்டுள்ள பிறந்த தேதி அடிப்படையில்தான் வயது தீர்மானிக்கப்பட வேண்டும். ஆதார் அட்டை வழங்கும் தனித்துவ அடையாள ஆணையம் கடந்த ஆண்டு வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில், "ஆதார் அட்டையை அடையாளத்தை உறுதிப்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், பிறந்த தேதிக்கு அது ஆதாரம் அல்ல" என்று தெரிவித்துள்ளது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உத்தரவை சுட்டிக்காட்டி இத்தகவலை கூறியுள்ளது. எனவே, வயதை தீர்மானிக்க ஆதார் அட்டை முறையான ஆவணம் அல்ல. மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்கிறோம்" இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறினார்கள். இதன் மூலம் பள்ளி சான்றிதழ்படி தான் வயதை தீர்மானிக்க வேண்டும் என்பதும், வயதை தீர்மானிக்க ஆதார் அட்டை முறையான ஆவணம் அல்ல என்பதும் உறுதியாகி உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications