VVPAT ஒப்புகை சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விவிபேட் ஒப்புகை சீட்டுகளை 100% எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஒவ்வொரு லோக்சபா தேர்தலுக்கும் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என்கிற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. ஆனால், தேர்தல் முடியும் வரை தேர்தல் ஆணையம் இந்த கோரிக்கைகளை காதில் போட்டுக்கொள்ளாததால் இப்போது வரை ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படுவதில்லை. பல்வேறு அரசியல் கட்சிகளும் கூட இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன.

Supreme Court Notice to Election Commission in VVPAT Verified Paper Case

அதாவது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மட்டும் வைத்து தேர்தலை நடத்தக் கூடாது என்றும், அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்புகைச் சீட்டு கருவியை இணைக்க வேண்டும், வாக்களிக்கும் வாக்காளர்களின் ஒப்புகைச் சீட்டினை சரிபார்த்து, தனியே ஒரு பெட்டியில் போட வேண்டும். அதன்பின், இயந்திரத்தில் உள்ள எண்ணிக்கை, ஒப்புகைச் சீட்டுகள் எண்ணிக்கையை ஒப்பிட்டு தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

சமீபத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, இந்த கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்திருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய வாய்ப்பிருப்பதாக கட்சி சார்பற்ற அமைப்புகளால் அச்ச உணர்வு வெளிப்படுத்தப்படுகிறது. இன்றும் வடஇந்திய மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

எனவே, அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் விவிபேட் எனினும் ஒப்புகைச்சீட்டு கருவிகளையும் இணைக்க வேண்டும். அந்த சீட்டுகளை முழுமையாக எண்ணி தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், விவிபேட் ஒப்புகை சீட்டுகளை 100% எண்ண வேண்டும் என்று கோரி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தாக்கல் செய்திருந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையில், "விவிபேட் ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்க போதுமான பணியாளர்கள் நியமிக்கப்பட்டால் 5-6 மணி நேரத்தில் பணியை முடித்துவிடலாம். 24 லட்சம் விவிபேட் இயந்திரங்களை வாங்க அரசு ரூ.5000 கோடியை செலவழித்துள்ளது. ஆனால் தற்போது வரையில் வெறும் 20,000 விவிபேட் ஒப்புகை சீட்டுகள் மட்டுமே சரிபார்க்கப்பட்டுள்ளன. இது மொத்த எண்ணிக்கையல் 5 சதவிகிதம்தான்" என மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணன், நேஹா ரதி ஆகியோர் கூறியிருந்தனர்.

மனுதாரரின் இந்த கோரிக்கை மீது பதிலளிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விரைவில் லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் விவிபேட் ஒப்புகை சீட்டு வழக்கு சூடுபிடித்திருப்பது பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+