Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பொது சிவில் சட்டம் தான் ஒரே தீர்வு.." முஸ்லீம் பெண்கள் பிரச்சனை.. அழுத்தமாக சொன்ன உச்ச நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முஸ்லிம் சிவில் சட்டத்தில் உள்ள பாகுபாடு நிறைந்த பரம்பரைச் சொத்து விவகாரங்களுக்கு பொது சிவில் சட்டமே சரியான தீர்வாக இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளது. சொத்து உரிமை தொடர்பான விதிகளை நீக்கிவிட்டால் மட்டுமே பிரச்சனை தீர்ந்துவிடாது என சொன்ன உச்ச நீதிமன்றம், பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையில் இன்றைய தினம் முஸ்லிம் பெண்களுக்குச் சம சொத்துரிமை கோரும் ஒரு பொது நல வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தான் சுப்ரீம் கோர்ட் இந்த கருத்துகளைத் தெரிவித்தது. அதாவது சிவில் சட்டங்களில் உள்ள சிக்கல்களுக்கு பொது சிவில் சட்டமே சிறந்த தீர்வாக அமையும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

Supreme Court on Uniform Civil Code UCC is only solution for Muslim Women Inheritance Rights

பொது சிவில் சட்டம்

பொது சிவில் சட்டம் தான் மிகப் பயனுள்ள தீர்வு எனத் தெரிவித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், அதேநேரம் தற்போதுள்ள சிவில் சட்ட விதிகளை ரத்து செய்வது சட்டரீதியான குழப்பங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார். இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ஷரியத் சட்டத்தின் கீழ் முஸ்லிம் பெண்களுக்குச் சம உரிமை மறுக்கப்படுவதாக வாதிட்டார். முத்தலாக் குறித்த ஷயரா பானோ வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் அவர் சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம் தனிநபர் சட்டம் (ஷரியத்) பயன்பாட்டுச் சட்டம், 1937 ரத்து செய்யப்பட்டால், அதற்கான மாற்று வழிகளையும் சேர்க்கும் வகையில் தங்கள் மனுவை திருத்தும்படி மனுதாரர்களிடம் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். பவுலோமி பவினி சுக்லா மற்றும் நியாய நாரி அறக்கட்டளை இணைந்து 1937ஆம் ஆண்டு முஸ்லிம் தனிநபர் சட்டத்தை எதிர்த்து இந்த வழக்கு தொடர்ந்துள்ளனர். பரம்பரை சொத்துக்களில் முஸ்லிம் ஆண்களை விட பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் பாகுபாடு காட்டுவதாகவும் மனுதாரர்கள் தெரிவித்தனர்.

நீதிபதிகள் வாதம்

பரம்பரைச் சொத்து என்பது அத்தியாவசிய மதப் பழக்கம் அல்ல, அது ஒரு சிவில் உரிமை என்று பூஷன் வாதிட்டார். சமத்துவத்தை உறுதிப்படுத்த நீதிமன்றம் இதில் தலையிட முடியும் என்று அவர் தெரிவித்தார். அப்போது 1937 சட்டத்தை ரத்து செய்வதன் விளைவுகள் குறித்து தலைமை நீதிபதி கவலையை வெளிப்படுத்தினார். அவர் மேலும், "அப்படி ரத்து செய்தால் என்ன வெற்றிடம் ஏற்படும்? அதற்கு என்ன தீர்வு?" என்று கேள்வி எழுப்பினார்.

நீதிபதிகள் மேலும், "விதிகள் ரத்து செய்யப்பட்டாலும், அடிப்படை தனிநபர் சட்டம் இந்திய அரசியலமைப்பின் 372வது பிரிவின் கீழ் தொடரும். எனவே, நீதித்துறை ஆணை மூலம் சமத்துவத்தை உருவாக்குவது சட்டரீதியான வெற்றிடங்களை ஏற்படுத்தலாம். இதுபோன்ற சிக்கல்களுக்கு பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர நாடாளுமன்றத்திற்குப் பொறுப்பை விட்டுவிடுவது நல்லது" என்றார்.

என்ன சிக்கல்

இந்திய அரசியலமைப்பின் 372வது பிரிவு என்பது சுதந்திரத்திற்கு முந்தைய விதிகள் தொடரும் என்கிறது. அதாவது மத்திய அரசு அதில் தலையிட்டு மாற்றும் வரை, 1937 ஷரியத் சட்டம் போன்ற அரசியலமைப்புக்கு முந்தைய சட்டங்கள் அப்படியே தொடரும் என்பதே இதன் பொருள். நீதிபதி பாக்ஸி இந்தப் பிரிவை மேற்கோள் காட்டி, சட்டத்தை ரத்து செய்வதால் மட்டும் அடிப்படை விதிகள் நீங்காது என்பதைச் சுட்டிக்காட்டினார். எனவே, தெளிவான சமத்துவத்தை உறுதி செய்ய, புதிய சட்டம் இயற்றுவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

1937 சட்டம் ரத்து செய்யப்பட்டால், முஸ்லிம் பெண்களுக்கு இந்திய வாரிசு உரிமைச் சட்டம் பொருந்தும் என்று பூஷன் பரிந்துரைத்தார். இதன்மூலம் முஸ்லிம் ஆண்களுக்கு இணையாக முஸ்லிம் பெண்கள் சொத்துரிமை பெறலாம் என்றார். பூஷன் மேலும், "இது முத்தலாக் விவகாரத்தை விட மிகவும் மதச்சார்பற்ற பிரச்சினை... இது முற்றிலும் ஒரு சிவில் உரிமைகள் பிரச்சனை. இதற்கு ஒரு அரசியல் சாசன அமர்வு மூலம் நிரந்தரமாகத் தீர்வு காணப்பட வேண்டும்" என்று பூஷன் அழுத்தமாகத் தெரிவித்தார்.

பொது சிவில் சட்டம்

இந்தியாவில் இப்போது கிரிமினல் சட்டங்கள் என்பது அனைத்து தரப்பினருக்கும் ஒன்று தான். அதாவது கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் நடக்கும்போது குற்றவாளி யாராக இருந்தாலும் ஒரே தண்டனை தான் வழங்கப்படும். ஆனால், சிவில் பிரச்சனைகள், அதாவது திருமணம், சொத்து உள்ளிட்ட தனிநபர் சட்டங்களில் விதிகள் மாறுபடும். இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்களுக்கு தனித்தனி சட்டங்கள் இருக்கும். அதை நீக்கிவிட்டு ஒரே சட்டத்தைக் கொண்டு வருவது தான் பொது சிவில் சட்டமாகும்.

இது அரசியலமைப்பின் அரசு வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாடுகளில் (Directive Principle of State Policy - DPSP) ஒன்றாக இந்த பொது சிவில் சட்டம் இடம்பெற்றுள்ளது. இது சமத்துவத்தை மேம்படுத்தும் சட்டங்களை இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. உத்தரகண்ட் 2024இல் செய்தது போல, மாநிலங்களும் தங்கள் அதிகார வரம்பிற்குள் உள்ள விவசாய நிலம் அல்லது சொத்து போன்ற குறிப்பிட்ட சிவில் விஷயங்களில் சட்டம் இயற்றலாம்.

ஒரே தீர்வு

வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் மேலும், "இதற்கான பதில் பொது சிவில் சட்டம்தான். நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சம உரிமைகளை உறுதிப்படுத்தும் ஒரே வழி, இந்தியா முழுவதும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவருவதுதான்" என்றனர். பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என சுப்ரீம் கோர்ட் சொல்வது இது முதல்முறை இல்லை. இதற்கு முன்பு, முத்தலாக் தொடங்கி பல்வேறு விஷயங்களிலும் பொது சிவில் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ஆதரித்தே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+