வங்கி கணக்கு.. டிஜிட்டல் கேஒய்சி விதிமுறைகள் தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி, கிராமப்புற மக்கள், மூத்த குடிமக்கள், நலிந்த பிரிவினர், மொழி சிறுபான்மையினர் ஆகியோரும் டிஜிட்டல் கே.ஒய்.சி. பயன்படுத்த சிரமப்படுகின்றனர். அனைவரும் பயன்படுத்தக்கூடிய கே.ஒய்.சி. விதிமுறைகளை உருவாக்குவது அரசின் கடமை என்றும், டிஜிட்டல் கே.ஒய்.சி. விதிமுறைகளில் மாற்றம் தேவை என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்' என்ற நடைமுறையை அதாவது ஆங்கிலத்தில் சுருக்கமாக கே.ஒய்.சி. என்று அழைக்கப்படும் நடைமுறையை, இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும், அரசு நலத்திட்டங்களை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு தற்போது பயன்படுத்தி வருகின்றன.

ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்க வேண்டும் என்றாலும், ஒரு வங்கியில் கடன் உள்பட பல்வேறு சேவைகளை பெற வேண்டும் என்றாலும், ஆதார் அடையாளங்கள், விரல் ரேகை, முக அடையாளம் போன்றவை தேவைப்படுகிறது. இந்த அடையாளங்களை பெறுவது தான் டிஜிட்டல் கே.ஒய்.சி. என்று அழைக்கப்படுகிறது. இதன்மூல ஒருவரின் முக அடையாளம், விரல் ரேகை அடையாளம் ஆகியவை டிஜிட்டல் முறையில் உறுதி செய்யப்படுகிறது.
ஆனால் டிஜிட்டல் கேஒய்சியை பொறுத்தவரை பார்வை குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் மாற்றுத்திறனாளிகள், ஆசிட் வீச்சால் முகம் சிதைந்தவர்கள் உள்ளிட்டோர், டிஜிட்டல் கே.ஒய்.சி. விதிமுறையின்படி, முக அடையாளத்தை உறுதி செய்வதில் சிக்கல் இன்று வரை இருக்கிறது.
இதுதொடர்பான வழக்கு, நிலுவையில் இருக்கிறது. அவ்வழக்கு நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு கூறுகையில், இந்திய அரசியல் சாசனத்தின் 21-வது பிரிவு வலியுறுத்தும் வாழும் உரிமையில் டிஜிட்டல் வசதியை பெறும் உரிமையும் இடம் பெற்றுள்ளது. டிஜிட்டல் கே.ஒய்.சி. விதிமுறையை பூர்த்தி செய்ய தலையை நகர்த்தி, முகத்தை நேராக காண்பிக்க வேண்டும். முகத்தில் குறைபாடு உள்ளவர்களும், முகம் சிதைந்தவர்களும் இதை செய்வது கடினம் ஆகும்.
அதனால் அவர்கள் வங்கி கணக்கு தொடங்குவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிக்கல் ஏற்படுகிறது. அரசின் நலத்திட்டங்களையும் பெற முடியாத நிலை உள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே 20 உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உரிமையை கோர அரசியல் சாசன உட்பிரிவுகளும், சட்ட உட்பிரிவுகளும் வழிவகுக்கின்றன. ஆகவே, மாற்றுத்திறனாளிகள், ஆசிட் வீச்சால் முகம் சிதைந்தவர்கள் ஆகியோருக்காக டிஜிட்டல் கே.ஒய்.சி. விதிமுறைகளில் மத்திய அரசு மாற்றம் செய்ய வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி, கிராமப்புற மக்கள், மூத்த குடிமக்கள், நலிந்த பிரிவினர், மொழி சிறுபான்மையினர் ஆகியோரும் டிஜிட்டல் கே.ஒய்.சி. பயன்படுத்த சிரமப்படுகின்றனர். அனைவரும் பயன்படுத்தக்கூடிய கே.ஒய்.சி. விதிமுறைகளை உருவாக்குவது மத்திய அரசின் கடமையாகும்" இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினார்கள்.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications