பொறுப்பேற்ற 3 நாட்களிலேயே வந்த ஷாக் உத்தரவு! தலைமைச் செயலர் நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் ஆர்டர்!
டெல்லி: தமிழக அரசின் தலைமைச் செயலர் முருகானந்தம் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டத்துறை அதிகாரிகள் நியமனம், ஓய்வூதியம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் தலைமை செயலராக கடந்த 19ஆம் தேதிதான் பொறுப்பேற்றார் முருகானந்தம்.
தமிழகத்தில் கடந்த 2021 ல் திமுக அரசு பொறுப்பேற்ற நிலையில், தமிழ்நாடு அரசின் 48-வது தலைமைச் செயலராக இறையன்புவை முதல்வர் ஸ்டாலின் நியமித்தார். இவர் கடந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, சிவ்தாஸ் மீனா 49-வது தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார். சிவ்தாஸ் மீனா வரும் அக்டோபரில் ஓய்வுபெற உள்ளார்.

இந்நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலர் பதவிக்கு, முதல்வரின் செயலர் நிலை 1-ல் இருந்த நா.முருகானந்தம் நியமிக்கப்பட்டார். முருகானந்தம், தமிழகத்தின் 50-வது தலைமைச் செயலராக கடந்த 19 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலர் முருகானந்தம், 1991 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் கோவை மாவட்ட ஆட்சியர், சுற்றுச்சூழல் துறை இயக்குநர், ஊரக வளர்ச்சி துறை இணை செயலர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையராகவும், கடந்த அதிமுக ஆட்சியில் தொழில் துறை செயலராகவும், திமுக ஆட்சியின் தொடக்கத்தில் நிதித் துறை செயலராகவும் பணியாற்றினார். பின்னர், முதல்வரின் தனி செயலராக பணியாற்றிய முருகாநந்தம் தற்போது, தலைமைச் செயலர் ஆகியுள்ளார்.

இந்நிலையில், தலைமைச் செயலராகப் பொறுப்பேற்று 3 நாட்களிலேயே, உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் அவரை நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிபதிகள், சட்டத்துறை அதிகாரிகள் நியமனம், ஓய்வூதியம் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு நடைபெற்றது.
அப்போது நீதிபதிகள், தமிழக தலைமைச் செயலர், நிதித்துறை செயலர் ஆகியோர் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர். தலைமைச் செயலர் முருகானந்தம் அண்மையில் தான் பொறுப்பேற்றதால், அவர் ஆஜராவதில் விலக்கு அளிக்க வேண்டும் என்றும், வீடியோ மூலம் ஆஜராவார் என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
அதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமைச் செயலர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று தெரிவித்ததோடு, சொல்ல விரும்பும் கருத்துகளை நேரில் ஆஜராகி கூற என்ன தயக்கம்? என்றும் கேள்வி எழுப்பினார்.
-
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங்












Click it and Unblock the Notifications