Waqf: வக்பு சட்டத்திற்கு முழுமையாக தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு! சில முக்கிய விதிகளுக்கு மட்டும் இடைக்கால தடை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை கடந்த மே மாதம் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. சட்டத்திற்கு முழு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், சில குறிப்பிட்ட விதிகளுக்கு மட்டும் தடை விதித்து உத்தரவிட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு வக்பு திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. நாடாளுமன்றத்திலேயே பல்வேறு எதிர்க்கட்சிகளும் வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். ஆனால், அந்த எதிர்ப்புகளைத் தாண்டி ஆளும் தரப்பு வக்பு திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது. குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளிக்கவே வக்பு திருத்தம் சட்டமானது.

Supreme Court Interim Order on Waqf Act today Key Issues on Validity Challenged by petitioners

வக்பு சட்டம்

இருப்பினும், மத்திய அரசு கொண்டு வந்த இந்த வக்பு திருத்தச் சட்டத்தை பல்வேறு தரப்பினரும் கடுமையாக எதிர்த்தனர். இது தொடர்பாக சுமார் 70க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வு விசாரிக்க வேண்டி இருந்தது. இருப்பினும், தான் சீக்கிரம் ஓய்வு பெறுவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி சஞ்சீவ் கன்னா, இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை தேவை என்றும் புதிய தலைமை நீதிபதி இந்த வழக்கை விசாரிப்பார் என்றும் கூறியிருந்தார்.

தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா ஓய்வைத் தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது. கடந்த மே மாதம் இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அப்போது பல்வேறு தரப்பினரும் பல முக்கியமான வாதங்களை முன்வைத்தன. மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபில், சிங்வி என பல்வேறு தரப்பினரும் பல முக்கிய வாதங்களை முன்வைத்தனர்.

இடைக்கால உத்தரவு

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்தது. இந்தச் சூழலில் தான் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வக்பு வாரிய சட்டத்தை முழுமையாக நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தச் சட்டத்தை முழுமையாக நிறுத்தி வைக்க எந்தவொரு முகாந்திரமும் இல்லை என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

தடை விதித்த உச்ச நீதிமன்றம்

அதேநேரம் வக்பு வாரிய சட்டத்தின் சில குறிப்பிட்ட விதிகளுக்கு மட்டும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. புதிய சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களைச் சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம், ஒரு முக்கிய கருத்தைத் தெரிவித்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "தனிப்பட்ட குடிமக்களின் உரிமைகளை ஒரு மாவட்ட ஆட்சியர் தீர்மானிக்க அனுமதிக்க முடியாது. இது அதிகாரப் பிரிவினையை மீறும் செயல். ஆட்சியருக்கு அத்தகைய அதிகாரங்கள் அளிக்கும் விதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்" என்று தெரிவித்தனர்.

என்ன விதிகள்

இது ரொம்பவே முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் வக்பு சட்டத் திருத்தத்தின்படி, ஒரு குறிப்பிட்ட சொத்து முழுவதும் அல்லது அதன் ஒரு பகுதி அரசுக்குச் சொந்தமானது என்று கலெக்டர் குறிப்பிட்டால், அத்தகைய சொத்தின் வக்பு பதிவு செய்யப்படாது. அதாவது நீதிமன்றம் அந்த பிரச்சினையை விசாரித்துத் தீர்ப்பளிக்கும் வரை அது வக்பு நிலமாகக் கருதப்படாது. இந்த விதியை தான் பல்வேறு தரப்பினரும் எதிர்த்து வந்த நிலையில், அதை நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

நியமிக்க கூடாது

அதேபோல வக்பு வாரியத்தில் மூன்றுக்கு மேற்பட்ட இஸ்லாமியர் அல்லாத உறுப்பினர்களை நியமிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியது. மேலும், மத்திய வக்பு கவுன்சிலில் 4க்கும் மேற்பட்ட இஸ்லாமியர் அல்லாத உறுப்பினர்களும் இருக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது. மேலும், ஒருவர் வக்புக்கு நிலத்தைக் கொடுக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்று விதிகளில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த விதியும் நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று தலைமை நீதிபதி கவாய் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+