ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனே பதவி நீக்கம் செய்யுங்க.. உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு!
டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக பதவியில் இருந்து நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாடு ஆளுநராக செயல்பட ஆர்.என்.ரவிக்கு விருப்பம் இல்லை என்பதையே அவரது செயல்பாடுகள் காட்டுகின்றன, எனவே அவரை பதவியில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது. தமிழ்நாடு ஆளுநராக செயல்பட அவருக்கு விருப்பம் இல்லை என்பதையே அவரது செயல்பாடுகள் காட்டுகின்றன. விளம்பரம் தேடும் நோக்கிலேயே செயல்பட்டு வருகிறார் என வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றது முதலே திமுக அரசுக்கும், அவருக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது மட்டுமல்லாமல் திமுகவின் கொள்கைகளையும் விமர்சித்து வருகிறார் ஆளுநர் ரவி. பல்வேறு விவகாரங்களிலும் தொடர்ந்து வரும் மோதல், சட்டப்பேரவை வரை தொடர்ந்து வருகிறது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரை நிகழ்த்தாமல் புறக்கணித்து விட்டு வெளியேறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நீண்டகால தமிழக சட்டப்பேரவை மரபின்படி, ஆளுநர் உரைக்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும், நிகழ்வின் இறுதியில் தேசியகீதம் பாடுவதும் நடைமுறையாக இருந்து வருகிறது
இந்த நடைமுறை மரபை மாற்றி, தொடக்கத்திலேயே தேசிய கீதம் பாடவேண்டும் என வலியுறுத்தி, அது ஏற்படாத நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக அரசு தயாரித்து வழங்கிய ஆளுநர் உரையை வாசிக்காமல் சட்டசபையில் இருந்து வெளியேறினார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை தமிழக சட்டப்பேரவையையும் அரசமைப்பு சட்டத்தையும் அவமதிக்கும் செயல் என பல்வேறு அரசியல் கட்சிகளும் விமர்சித்துள்ளன.
இந்நிலையில் தான், ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆளுநரின் செயல்பாடு அரசியலைமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications