ஆடைக்கு மேல் தொட்டாலும் பாலியல் சீண்டல்தான்.. போக்சோ சட்டத்துக்குள் வரும்.. உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தால் அது போக்ஸோ சட்டத்தின் கீழ் வராது என்ற மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பை குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கீழமை நீதிமன்றம் சதீஸ் என்ற இளைஞருக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டது. போக்ஸோ சட்டத்தின் கீழும், ஐபிசி 354 சட்ட பிரிவின் கீழும் இவருக்கு 3 வருடம் தண்டனை வழங்கப்பட்டது.
ஆனால் மேல்முறையீட்டில் மும்பை ஹைகோர்ட் இவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் இருந்து மட்டும் விடுவித்து, ஐபிசி சட்டத்தின் கீழ் தண்டித்தது. சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அந்த சிறுமியின் உடையை இவர் அகற்றவில்லை என்பதால் போக்ஸோ சட்டம் நீக்கப்பட்டது.

போக்ஸோ சட்டம்
சிறுமியின் உடையை குற்றஞ்சாட்டப்பட்டவர் கழற்றவில்லை. இதனால் இது பாலியல் குற்றமாக கருதப்படாது. எனவே இதை போக்ஸோ சட்டத்தின் கீழ் விசாரிக்க முடியாது என்று கூறி மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா வி கனேடிவாலா உத்தரவிட்டார். இவரின் இந்த உத்தரவால் ஆடையை கழற்றாமல் 12 வயதுக்கு குறைவான சிறுமிகளின் மார்பகத்தை, உடலை தொடுவது பாலியல் குற்றமாகாது என்றும் உத்தரவிட்டார்.

உத்தரவு
இந்த நிலையில்தான் வழக்கறிஞர்கள், சட்ட வல்லுநர்கள் பலர் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது மிகப்பெரிய அளவில் தவறான முன்னுதாரணமாக முடியும் என்றும் குறிப்பிட்டனர். அதுமட்டுமின்றி மத்திய அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் இதற்கு எதிராக தன்னுடைய சட்ட அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

மேல்முறையீடு
தேசிய பெண்கள் கமிஷனும் இந்த தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறைக்கீடு செய்தது. பல்வேறு மனுக்கள் இதில் தொடுக்கப்பட்ட நிலையில் கடந்த ஜனவரி 27ம் தேதி இந்த மும்பை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. அதன்பின் வழக்கு விசாரணையில் அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் இந்த உத்தரவை கடுமையாக எதிர்த்து இருந்தார். பாலியல் வழக்குகளில் இது தவறான முன்னுதாரணத்தை கொடுக்கும் என்று உத்தரவிட்டு இருந்தார்.

என்ன
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி யுயு லலித் தலைமையிலான நீதிபதிகள் ரவீந்திர பாட், எம் திரிவேதி அடங்கிய அமர்வில் விசாரணை செய்யப்பட்டது. இந்த நிலையில் விசாரணையின் முடிவில் ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தால் அது போஸ்கோ சட்டத்தின் கீழ் வராது என்ற மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரவு
அதன்படி சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிப்பது போல சட்டம் இருக்க கூடாது. உடை மீது தொட்டாலும் அது பாலியல் சீண்டல்தான். பாலியல் ரீதியாக உடலில் எப்படி தொட்டாலும் அது பாலியல் குற்றமாகவே கருதப்படும். உடைக்கு மீது தொட்டாலும் ஒரே நோக்கம்தான். இதில் சட்ட ரீதியாக மாற்றம் செய்ய முடியாது. இதனால் மும்பை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம் என்று உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications