சொத்துக்கள் பறிமுதல்.. அமலாக்கத்துறைக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்! அதிகாரம் இல்லை என கறார்!
டெல்லி: சொத்துக்கள் பறிமுதல் செய்யும் விவகாரத்தில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. சொத்துக்கள் மீது நீதித்துறை சாராதவர்கள் எப்படி முடிவெடுக்க முடியும்? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், 180 நாட்கள் வரை நீதித்துறை ஆய்வு இல்லாமல் சொத்துகளைப் பறிமுதல் செய்ய வைக்கும் அதிகாரத்தை எதிர்த்து கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தார்.

வழக்கு என்ன?
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர், தனது வங்கிக் கணக்குகள், நிரந்தர வைப்புநிதி, நகைகள், வாகனங்கள் உள்ளிட்ட அனைத்துச் சொத்துக்களும் அமலாக்கத்துறையால், காரணம் தெரிவிக்கப்படாமல் மற்றும் முறையிட வாய்ப்பளிக்கப்படாமல் பறிமுதல் செய்யப்பட்டு முடக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். இதுபோன்ற வரம்பற்ற அதிகாரங்கள், குறைந்தது 6 மாதங்களுக்கு அமலாக்கத்துறையை நீதித்துறை ஆய்வு இல்லாமல் செயல்பட அனுமதிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நீதிபதி கேள்வி
இந்த வழக்கு நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஏ.எஸ். சந்தூர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் நீதிபதி நரசிம்மா, பணமோசடி தடுப்புச் சட்டத்தில் குறைபாடு இருப்பதாகக் கருத்து தெரிவித்தார். சொத்துரிமைகள் மற்றும் அரசியல் சட்டப் பாதுகாப்புகள் போன்ற சிக்கலான வழக்குகளில், நீதித்துறை சார்பற்ற உறுப்பினர் எவ்வாறு தீர்வு காண முடியும்? என அவர் கேள்வி எழுப்பினார்.
உச்சநீதிமன்றம் உத்தரவு
அதேபோல சட்டமன்ற உறுப்பினருக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி மற்றும் ரஞ்சித் குமார், அமலாக்கத்துறைக்கு கட்டுப்படுத்தப்படாத அதிகாரம், அதிகார துஷ்பிரயோகத்துக்கு வழிவகுப்பதாக வாதிட்டனர். இதனையடுத்து மனு குறித்து, மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இந்த வழக்கு தொடர்பாக மனுதாரர் தரப்பில் இருந்து ஆஜராகி இருந்த வழக்கறிஞர்கள், பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் செயல்படும் தீர்ப்பளிக்கும் ஆணையத்தின் அமைப்பில் உள்ள முக்கியமான குற்றச்சாட்டை விவாதித்திருந்தனர்.
சட்டத்தில் பிரச்சனையா?
அதாவது பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், ஒரு நபரின் சொத்துக்களை தற்காலிகமாக 180 நாட்களுக்கு பறிமுதல் செய்யலாம். இந்த தற்காலிக பறிமுதல் சட்டப்படி சரியானதுதானா? மற்றும் நிரந்தரமாக தொடர வேண்டுமா? என்பதை ஆய்வு செய்து சொல்ல வேண்டியது தீர்ப்பாயத்தின் பொறுப்பாகும். ஆனால், இந்த தீர்ப்பு ஆணையத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர், நீதித்துறை பின்னனி இல்லாதவர் என்பதை முக்கியமான குற்றச்சாட்டு. அவர் நீதிபதியாகவோ அல்லது சட்டத்துறையில் போதுமான அனுபவமோ பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. உதாரணத்திற்கு அவர் ஒரு செலவு கணக்காளராக இருக்கலாம் என்று சட்டம் சொல்கிறது.
முக்கியமான கேள்வி
சொத்து பறிமுதல் என்பது தனி நபரின் அடிப்படை உரிமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் சட்ட விஷயங்களை கொண்டது. சட்ட பயிற்சி இல்லாத ஒருவர், இத்தகைய கடுமையான விவகாரங்களில் நடுநிலையுடன் சட்டத்தின்படி தீர்ப்பளிக்க முடியுமா? என்பதை கேள்வி.
இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதி பி எஸ் நரசிம்மன் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். "பண மோசடி தடுப்பு சட்டத்திலேயே தவறு இருப்பதாக தோன்றுகிறது. மிகப்பெரிய சட்ட ரீதியான தாக்கங்களை கொண்ட ஒரு விவகாரத்தை, நீதித்துறையில் பயிற்சி பெறாத ஒருவரை கொண்டு தீர்ப்பளிக்க அனுமதிப்பது சட்டத்தின் அடிப்படை நோக்கத்திற்கு முரணானது" என்று கவலை எழுப்பியிருந்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications