பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கைக்கு தடை இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலையொட்டி சிறப்பு வாக்காளர் திருத்த நடவடிக்கையை தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றை வாக்காளர் திருத்தத்துக்கான ஆவணங்களாக எடுத்து கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
பீகாரில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது பீகாரில் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். வரும் தேர்தலில் பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம், முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சியின் மதசார்பற்ற ஹிந்துஸ்தானி அவா மோர்ச்சா (எச்ஏஎம்எஸ்) கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

அதேபோல் எதிர்க்கட்சிகள் சார்பில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்த பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியது. கடந்த 2003ம் ஆண்டுக்கு பிறகு இந்த பணி நடக்கிறது. இதனால் (special intensive revision -SIR) என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.
இதற்கு கடும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வது 2 கோடி வாக்காளர்களை நீக்க வழிவகுக்கும். பீகாரில் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். இதனால் அவர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு இதனை செய்வது ஆளும் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக மாறும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.
அதுமடடுமின்றி தேர்தல் ஆணையத்திலும் புகார் மனு கொடுத்தனர். ஆனால் தேர்தல் ஆணையம் உத்தரவை பிறப்பிக்கவில்லை. இதையடுத்து நேற்று பீகாரில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சிகள் சார்பில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் செய்யப்பட்டு இருந்தன. இந்த மனுக்களை இன்று நீதிபதிகள் சுதன்ஷூ துலியா மற்ம் ஜோய்மல்யா பாக்சி அமர்வு விசாரித்தது.
அப்போது பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதில் எந்த தவறும் இல்லை. இது தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணியாகும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. அதோடு வாக்காளர் பட்டியல் பெயர் திருத்த நடவடிக்கை மற்றும் சரிபார்ப்பு பணிக்கு ஆதார், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து கொள்ள வேண்டும் என்ற இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications