என்ன பேசுகிறோம் என கவனத்துடன் பேசணும்.. எச்.ராஜா மீதான வழக்குகளை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!
டெல்லி: பெண்கள் குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்த வழக்கில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் அரசியலில் உள்ளவர்கள் என்ன பேசுகிறோம் என கவனத்துடன் பேச வேண்டும் எனவும் எச்.ராஜாவுக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது.
பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா மீது ஈரோடு போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். தந்தை பெரியார் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் ஈரோடு போலீசார் எச். ராஜா மீது வழக்கு பதிவு செய்தனர்.

ஈரோடு போலீசார் தம் மீது தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எச்.ராஜா மனுத் தாக்கல் செய்தார். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் எச்.ராஜாவின் மேல்முறையீட்டு மனுவை டிஸ்மிஸ் செய்தது. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எச்.ராஜா மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.
எச்.ராஜாவின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பிரசாந்த் குமார் பெஞ்ச் விசாரித்தது. இந்த விசாரணையின் முடிவில் எச்.ராஜாவின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை. எச்.ராஜா மீதான வழக்குகளைத் தள்ளுபடி செய்ய முடியாது என கூறி எச்.ராஜாவின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும் அரசியலில் இருப்பவர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை புரிந்து கொண்டு கவனத்துடன் பேச வேண்டும் எனவும் எச்.ராஜாவுக்கு அறிவுறுத்தல் விடுத்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications