"நேபாளத்தில் என்ன நடந்ததுனு பார்த்தீர்கள் தானே!" சோஷியல் மீடியா வழக்கில் சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்
டெல்லி: சமூக வலைத்தளங்களில் இருக்கும் கன்டென்ட்களை ஒழுங்குபடுத்த வேண்டும் எனத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அண்டை நாடான நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஏற்படுத்திய விளைவுகளைச் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.
இந்தக் காலத்தில் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் அதிகப்படியான நேரத்தைச் சமூக வலைத்தளங்களில் தான் செலவிடுகிறார்கள். காலை முதல் இரவு தூங்கும் வரையிலும் கூட சோஷியல் மீடியாவில் தான் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். இதற்கிடையே சமூக வலைத்தளங்களில் இருக்கும் கன்டென்ட்களை ஒழுங்குப்படுத்த வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.

உச்ச நீதிமன்றம்
குறிப்பாக மூக வலைத்தளங்களில் ஆபாச வீடியோக்கள் அதிகளவில் இருக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சொல்லி மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பிஎல் ஜெயின் என்பவர் பொது நல வழக்கைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க முடியாது எனச் சொல்லி உச்ச நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது.
அப்போது உச்ச நீதிமன்றம், "நேபாளத்தில் சமூக வலைத்தளங்களைத் தடை செய்ய ஒரு முயற்சி நடந்தது.. அதன் விளைவு என்னவென்று நீங்கள் பார்த்தீர்கள்," என்று குறிப்பிட்டது. மேலும் உச்ச நீதிமன்றம், "இது பாலிசி தொடர்பான விவகாரம்.. இது தொடர்பாக நாடாளுமன்றமும், அரசும் தான் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியது. எனவே நீங்கள் அவர்களிடம் தான் கோரிக்கை வைப்பது சரியாக இருக்கும்.. இதை எங்களால் ஏற்க முடியாது" என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது.
ஆபாச வீடியோக்கள்
முன்னதாக மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் வருண் தாக்கூர், "சில டிஜிட்டல் செயலிகளில் ஆபாச வீடியோக்கள் எளிதாக அக்சஸ் செய்யும் வகையில் இருக்கிறது. குழந்தைகள் இதுபோன்ற கன்டென்ட்களை பார்க்க நேரிடுவதால் அவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். பல வெளிநாடுகளில் ஆபாச கன்டென்ட்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இந்தியாவிலும் அதேபோன்ற செயல் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் ஆன்லைன் வாயிலாகச் செயல்பட்டது. அப்போது முதல் குழந்தைகள் மிக இளம் வயதிலேயே டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். செல்போன் செயலிகளில் ஆபாச வீடியோக்களை கட்டுப்படுத்த எந்தவிதமான வழிமுறையும் இல்லை. இந்தச் சிக்கலைச் சமாளிக்க எந்தவொரு சட்டமும் இல்லை.. குறிப்பாக 13 முதல் 18 வயதுக்குட்பட்டோரை ஆபாச வீடியோக்கள் கடுமையாகப் பாதிக்கின்றன" என்றார்.
மிக மோசம்
வழக்கு தொடர்ந்து ஜெயின், இணைய ஆபாச வீடியோக்கள் குறித்த புள்ளிவிவரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். ஒவ்வொரு நொடியும் 5,000 ஆபாசத் தளங்கள் பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். மேலும் அந்த மனுவில், "ஒவ்வொரு ஆண்டும் 2 கோடிக்கும் அதிகமான ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வெளியிடப்படுகின்றன. 20 கோடிக்கும் அதிகமான ஆபாச வீடியோக்கள் இந்தியாவில் எளிதாக யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என சூழலில் இருக்கிறது.
தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-இன் பிரிவு 69A பிரிவின் கீழ் எந்தவொரு ஆன்லைன் கன்டென்களையும் பொது மக்கள் பார்ப்பதைத் தடுப்பதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறது. எனவே இந்த அடிப்படையில், ஒரு தேசியக் கொள்கையை உருவாக்க வேண்டும்" என் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இந்த மனுவை தான் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். இது தொடர்பாக மத்திய அரசும் முறையிடுமாறு தெரிவித்தனர்.
நேபாளப் போராட்டம்
நேபாளத்தைப் பொறுத்தவரை அங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜென் Z போராட்டங்கள் வெடித்து. அந்நாட்டு அரசு திடீரென வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் போன்ற 26 சமூக வலைத்தளங்களுக்குக் கடந்த செப்டம்பர் மாதம் தடை விதித்த நிலையில், அந்நாட்டு இளைஞர்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினர். ஏற்கனவே வேலையின்மையால் தவித்து வந்த இளைஞர்களுக்கு இது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த இளைஞர்கள் போராட்டத்தால் தான் நேபாள அரசு கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications